நகராட்சி நிர்வாக இயக்குநரகம்

 

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் மேற்பார்வையிடும் துறைத் தலைமையாக செயல்படுகிறது.  நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக  இயக்குநர் அவர்களை தலைவராகவும் மற்றும்  இணை ஆணையர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் ஏழு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களை (மண்டலத்திற்கு ஒருவர் என செங்கல்பட்டு, வேலுhர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்கள்) கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தொகை 80,65,843 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.18 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 23.08 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.10 சதவீதமாகவும் உள்ளது. மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மொத்தம் 1,278.34 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 9.38 சதவீதமாகும்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சிகளின் மக்கள் தொகை 90,18,646 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.50 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 25.80 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாகவும் உள்ளது.  நகராட்சிகள் மொத்தம் 2560.12 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 18.78  சதவீதமாகும்.

          தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மதுரை, கோயம்புத்துhர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர்,  தூத்துக்குடி, திண்டுக்கல்,  தஞ்சாவூர்,ஆவடி,நாகர்கோயில்,ஹோசூர்,தாம்பரம்,கும்பகோணம்,கடலூர்,கரூர்,சிவகாசி,காஞ்சிபுரம்      மற்றும் 138  நகராட்சிகள், நகராட்சி நிர்வாக இயக்குனரின்  நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.  மாநிலத்தில் உள்ள நகராட்சிகள் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கீழ்காணுமாறு தரம் பிரிக்கப்பட்டுள்ளது. 

. எண். தரம் ஆண்டு   வருமானம்     (கோடியில்) நகராட்சிகளின் எண்ணிக்கை
1 சிறப்பு நிலை 10.00 க்கு மேல் 8
2 தேர்வு நிலை 6.00-10.00 28
3 முதல் நிலை 4.00-6.00 34
4 இரண்டாம் நிலை 4.00க்கு கீழ் 68
மொத்தம் 138

நகராட்சி நிர்வாகத்துறை வரலாறு

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துக்கென்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. தென்னிந்தியாவில் கோலோச்சிய சோழர்களால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த அமைப்பான ‘குடவோலை’ முறை, நன்கு வடிவமைப்பட்ட, பிரதிநிதித்துவ அமைப்பு. இந்த அமைப்பே, தற்போதுள்ள மக்களாட்சி அமைப்புகளுக்கு அடிப்படையாகும்.

நகராட்சி நிர்வாகத்துறை வரலாற்றில் பின்வரும் சிறப்பம்சங்கள் உள்ளன:

Alt+O

அரசியலமைப்பு திருத்தம்:

1992ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஒரு புதிய பிரிவு கீழ்கண்ட காரணங்களுக்காக சேர்க்கப்பட்டது.

  • மூன்று வகையான நகராட்சி அரசியலமைப்புகள்:
    • அ. கிராமங்களிலுருந்து நகர்ப்புறங்களாக மாறிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்காக நகர் பஞ்சாயத்து (டவுன் பஞ்சாயத்து)
    • ஆ. சிறிய நகர்ப்புற பகுதிகளுக்காக நகரசபை
    • இ. பெரிய நகர்ப்புற பகுதிகளுக்காக மாநகராட்சி
  • நகரசபைகளின் அமைப்பு
    • அ. நகராட்சிகளின் வார்ட் அல்லது மற்ற மட்டங்களில் குழுவின் தலைவர் பிரதிநிதித்துவம் ஏதாவது இருந்தால்,
    • ஆ. குறிப்பிட்ட நகரசபை பகுதியடங்கிய தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் / பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதித்துவம்
  • மாநில சட்டம் குறிப்பிட்டுள்ள முறைபடி நகராட்சி தலைவர் தேர்வு
  • மாநில சட்டம் வழங்கியபடி நகராட்சிகளின் வார்ட் அல்லது மற்ற மட்டங்களில் குழுக்கள் அமைப்பு
  • நகரசபைகளின் உறுப்பினர் மற்றும் தலைவர் ஆகிய இரு பதவிகளிலும் இட ஒதுக்கீடு
    • அ. தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு
    • ஆ. பெண்களுக்கான ஒதுக்கீடு
    • இ. பிற்பட்ட மக்களுக்களின் நலனுக்காக ஒதுக்கீடு
  • ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான பதவி
  • நகராட்சிகள் நிர்ணயிக்கும் வரி தீர்வை மற்றும் கடன்கள், வரி தீர்வை மற்றும் கடன்கள் மூலம் கிடைத்த வருமானத்தை நகரசபைகளுக்கு மாநில அரசு மூலம் அளித்தல் மற்றும் மானியம் வழங்குதல்
  • நகராட்சிகளின் நிதி வசதியை ஆய்வு செய்ய மாநில நிதி; ஆணையம் அமைப்பு
  • கணக்கு தணிக்கை
  • அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்திட மாநில தேர்தல் ஆணையம் அமைப்பு

அரசியலமைப்பு திருத்தங்கள்:

ஒரு தனி பகுதியை சேர்த்து அரசியலமைப்பை திருத்தும் திட்டத்தின் மூலம் அரசியலமைப்பு சட்டம் 1992 (74வது திருத்தம்) நிறைவேறி முடிந்தது. நகர்ப்​புற  உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான திருத்தங்கள் அரசியலமைப்பு பகுதி IX-A ​ஆக இணைக்கப்பட்டுள்ளது. இது 243 பி(243 p) முதல் 243 இசட்ஜி (243 zg) வரை 17 விதிகள் கொண்டது. விதி 243-டபில்யு(243-w)வின்படி, அரசியலமைப்பு சட்டம் 1992 (74வது திருத்தம்) நகராட்சிகளுக்கு 12வது அட்டவணையின்படி கீழ்கண்டவாறு பட்டியலடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக சக்தி, அதிகாரம் மற்றும் பொறுப்பு அளிக்கிறது. அவை:-

12வது அட்டவணை
விதி 243-டபில்யு(Article 243-w)

  1. சிறு நகர திட்டமிடல் உட்பட நகர்ப்புற திட்டமிடல்
  2. நில பயன்பாடு மற்றும் கட்டிட நிர்மான கட்டுப்பாடு
  3. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான திட்டமிடல்
  4. சாலைகள் மற்றும் பாலங்கள்
  5. வீடு, தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான நீர் வழங்குதல்
  6. பொது நலன், சுகாதார பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை
  7. தீயணைப்புத் துறை
  8. நகர்புற வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழலியல் அம்சங்கள் தொடர்பான மேன்மை
  9. மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கிய சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன் பாதுகாப்பு
  10. சேரி பகுதிகள் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி
  11. நகர்புற ஏழ்மை ஒழித்தல்
  12. பூங்காக்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்ப்​​புற வசதிகள் உருவாக்குதல்
  13. கலாச்சாரம், கல்வி மற்றும் அழகுணர்ச்சி அம்சங்கள் மேன்மை
  14. புதைத்தல் மற்றும் இடுகாடுகள்; தகனம், சுடுகாடு மற்றும் மின்சார சுடுகாடு
  15. கால்நடைப்பட்டி மற்றும் மிருகவதை தடுப்பு
  16. பி​றப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய புள்ளி விவரங்கள்
  17. தெரு விளக்கு,​ பார்க்கிங் லாட், பேருந்து நிறுத்த வசதி மற்றும் பொது மக்கள் பயன்பாடு உள்ளடங்கிய பொது வசதிகள்
  18. இறைச்சிக்கூடம் மற்றும் தோல் பதனிடும் இடங்கள் முறைப்படுத்துதல்