நகர் வாழ்வாதாரம்

தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நகர்ப்புரசாலையோர வியாபாரிகள் நலத்திட்டம் மற்றும் நகர்ப்புர இரவு உறைவிடம் நகராட்சி நிர்வாகம் இயக்குனரகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புரத்தில், தங்க வசதியின்றி தெருவில் வசிப்போருக்கு (Street dwellers) இதுவரை, 56 நகராட்சிளில் மற்றும் 20 மாநகராட்சிளில் 229 உறைவிடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும்77 உறைவிடங்குளுக்கு உரிய நிதி பெற்று கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.“Street dwellers” – இல்லை என்ற நிலையினை அடைந்திட அனைத்து நகர்புரங்களிலும் உணவகத்துடன் கூடிய தரமான இரவு நேர உறைவிடங்கள் அமைப்பது இவ்வரசின் முக்கிய கொள்கையாகும்.

நகர்ப்புரசாலையோரவியாபாரிகள்நலத்திட்டத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு உதவிடும் வகைளில் தள்ளுவண்டிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுமதுரை, ஈரோடு மாநகராட்சிகளுக்கு மற்றும் திருவண்ணாமலை நகராட்சிக்கு 1652தள்ளுவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாநகராட்சிகள்மற்றும் 120 நகராட்சி பகுதிகளிள் உள்ள வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளுவண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10,000/- கடன் வங்கிகள் மூலம் 7%வட்டிமான்யத்துடன்வழங்கப்பட்டுவருகிறதுஇத்திட்டத்தின் மூலம் 3,44,269 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை1,57,298 சாலையோரம் வியாபாரிகளுக்கு ரூ.157.29 கோடி வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,86,971 சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும்.

தமிழ்நாடு நகர்புற வேலை வாய்ப்பு திட்டம்

தமிழ்நாடு நகர்புற வேலை வாய்ப்பு திட்டம்  2021 ம் ஆண்டு செப்டம்பரில் இயற்றப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். இத்திட்டத்தில் பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், மற்றும் பேரூராட்சிகளின் ஆணையர் ஆகியோர் மாநில அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பாவார்கள். இத்திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் பெருநகர் சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும் (14 மண்டலங்கள்), 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில்  தலா ஒரு நகராட்சியிலும் (7 நகராட்சிகள்), 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சியிலும் (37 பேரூராட்சிகள்)  செயல்படுத்தப்படும்.