குடிநீர் விநியோகம்

குடிநீர் விநியோகம் – தற்போதைய நிலவரம்

வாலாஜாபேட்டையில் குடிநீர் விநியோகம் திருப்திகரமாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  வீட்டு தேவையில்லாதவற்றிற்கு நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்படுகிறது,  வாலாஜாபேட்டையில் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டங்களும் அனைத்தும் TWAD Boardஐ தான் சார்ந்து உள்ளது,

வாலாஜாபேட்டை நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது, தற்போதைய குடிநீர் விநியோகம் செய்யும் திட்டங்களும் அனைத்தும், 2 கி,மீ தொலைவில் உள்ள வன்னிவேடு கிராமத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம் செய்யப்படுகிறது, தற்போதைய குடிநீர் தேவை 2.88 MLD என்ற அளவில் உள்ளது.

உள்ளாட்சி குடிநீர் கட்டமைப்புகள்

வாலாஜாபேட்டை நகராட்சியில் குடிநீர் விநியோகம் 1964 முதல் Over Head Tank (OHT) – உயர்மட்ட நீர்தேக்கத்தொட்டிகள் (ஆற்காடு தெத்து தெரு .. 2 Nos., கடப்பரங்கையன் தெரு….2 Nos, TNHB…2 Nos, இந்திராநகர்….1 No.) மூலம் நடைபெறுகிறது.

உயர்மட்ட நீர்தேக்கத்தொட்டியின் பெயர் Installed capacity in  lakhs liters Quantity Produced in  lakhs liters Quantity supplied in  lakhs liters
ஆற்காடு தெத்து தெரு 3.50 3.50 3.50
ஆற்காடு தெத்து தெரு 1.15 1.15 1.15
கடப்பரங்கையன் தெரு 3.00 3.00 3.00
கடப்பரங்கையன் தெரு 2.50 2.50 2.50
ஆற்காடு தெத்து தெரு 2.00 2.00 2.00
TNHB 4.00 4.00 4.00
             மொத்தம்  16.15 16.15 16.15

வாலாஜாபேட்டைக்கு பாலார் நதியே நீர் ஆதாரம் ஆகும். குடிநீர் விநியோகம் செய்யும் முன் குளோரினேசன் செய்யப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் PH அளவு 7.8 ஆகும்.

பாலார் நதியிலிருந்து பெறப்படும் குடிநீர்,  உயர்மட்ட நீர்தேக்கத்தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, பின்பு வாலாஜா நகர வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

தற்போது வாலாஜாபேட்டை நகராட்சியயில் 5743  குடிநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றில் 96% வீட்டு பயன்பாடும், 4% வணிகப் பயன்பாடும் ஆகும். 118 ஆழ்துளை குழாய்கள்  உள்ளன.  மொத்த   மக்கள்தொகையில் குடிநீர் பயன்பாட்டின் அளவீடு 90 LPCD ஆகும்.