பேருந்து நிறுத்தம்

விருதுநகர் டவுண் புல்லலக்கோட்டை சாலை புளுகணூரணி சாலை சந்திக்கும் இடத்தில் 4283.61 ச.மீ.பரப்பளவு உள்ள இடத்தில் இந்நகராட்சி பழைய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளாக மேற்படி இடத்தில் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு தங்கும் அறை வசதி உள்ளது. ஒரு கட்டணக் கழிப்பிடமும் இயங்கி வருகிறது. பயணிகள் நலனுக்காக ஆண் மற்றும் பெண்களுக்கு பொது கழிவறைகள் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தினை ஒட்டி பயணிகள் வசதிக்காக சைக்கிள் ஸ்டாண்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது இப்பேருந்து நிலையம் எம்.எஸ்.பி.நாடார் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.

நகராட்சி புதிய பேருந்து நிலையம்
நகராட்சி பேருந்து நிலையம் இட நெரிசலை கருத்தில் கொண்டு சாத்தூர் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான 1.41. ஹெக்டேல் நிலத்திலும், தனியாருக்குச் சொந்தமான 1.09 ஹெக்டேர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 2.50 ஹெக்டேர் நிலத்தில் உலக வங்கி உதவியுடன் ரூ.55.00 லட்சம் செலவில் 25-8-91 ம் தேதி புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.22.00 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் கட்டுதல், பாலம் கட்டுதல் முதல் தளத்தில் கடைகள் கட்டுதல், மின்விளக்கு வசதிகள் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டன. புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்காக நகராட்சியால் எடுத்துக் கொள்ளப்பட்ட தனியார் நிலத்திற்கு ஈடு செய்வதற்காக நகராட்சிக்குச் சொந்தமான 524/3 உள்ள இடத்தில் 6501 சதுர அடி நிலத்தினை பரிவர்த்தனை மூலம் வழங்க அரசிற்கு அனுமதி கோரி இவ்வலுவலக கோப்பு எண்.எப்1/1740/2000 மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்வேறு காலக்கட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்திரவு பிறப்பிக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்களால் மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும் மேற்படி வழக்குகளின் பேரில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.