பாதாள சாக்கடைத் திட்டம்

விருதுநகர் நகராட்சிக்கென பணிகள் அரசானை எண் 132. நாள் 28/02/2011 ன் பிரகாரம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பொருட்டு திருத்திய நிர்வாக / ஓப்புதல் அரசாணையின்படி ரூ2785 இலட்சமும், ஆண்டு பராமரிப்பு மதிப்பீடு ரூ35.64இலட்சமும் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மேற்கண்ட பாதாள சாக்கடை திட்டத்தில் சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் இரண்டு சிப்பங்களாகவும் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஒரு சிப்பமாகவும் பிரிக்கப்பட்டு பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நடைபெற்று வருகின்றன.

அரசாணையின்படி வைப்பு தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை நிர்ணயம் செய்ய உபவிதிகளை அங்கீகரிக்க இந்நகர் மன்றம் தனது தீர்மான எண்.255 நாள் 30-4-2007 மற்றும் தீர்மானம் எண்.382 நாள் 20-07-2007 ல் அனுமதி வழங்கி, நகராட்சி நிர்வாக ஆணையரக கண்காணிப்பு பொறியாளர் அவர்களின் செயல்முறைகள் ஆணை மூ.மு.எண்.26819/07 UGSS-1, நாள் 20-10-2007 ல் உபவிதிகளுக்கு பொது அங்கீகாரம் வழங்கப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் சேகரிக்கும் சிப்பம்-1 மற்றும் சிப்பம் 2 ல் பணிகள் முடிவுற்று சாக்கடை கழிவுநீர் தினமும் 16.00 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சிப்பம்-1 ல் பகுதி 1 மற்றும் 2ல் மொத்தமுள்ள 43.82 கி.மீ. சாக்கடை குழாய் பதிக்கும் பணியில் 40.08 கி.மீ.பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன மொத்தமுள்ள கழிவுநீர் சேகரிக்கும் புதைசாக்கடை வாயிற் புகைகளின் மொத்த எண்ணிக்கை 1749ல் இதில் 1641 எண்ணம் முடிவடைந்துள்ளது.

சிப்பம்-3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் முழுவதும் முடிக்கப்பெற்று மற்றும் இயந்திரங்கள் பொருத்தும் பணிகளும் முடிவுற்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை அவர்களின் அனுமதி ஆணை எண் 22927 நாள் 16.08.2013ல் பெறப்பட்டு உள்ளது. தினமும் 16.00 இலட்சம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் அருகில் உள்ள கௌசிகா ஆற்றில் விடப்பட்டு வருகிறது.

விரிவான திட்ட அறிக்கையின்படி விருதுநகர் நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பாதாளச் சாக்கடை இணைப்புகள் 12090 ஆகும். சிப்பம்1ல் 6731ம் மற்றும் சிப்பம்-2ல் 5400 அடங்கும் இவற்றில் சிப்பம்1ல் 6731ம் சிப்பம் 4747ம் ஆக மொத்தம் 11478 இணைப்புகள் முடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை இணைப்பிற்கான காப்புத் தொகை ரூ. 301.35 இலட்சம் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மூலமாக இத்திட்டப்பணிக்காக இது வரை தொகை ரூபாய் 2764.51 /- இலட்சம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாhரியத்திற்க்கு விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை திட்ட உள் குழாய் வீட்டு இணைப்புகள்
விருதுநகர் நகராட்சியினை துhய்மையான நகரமாக மாற்றிடும் வகையில் இத்திட்டத்தினை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மேலும் பாதாளச்சாக்கடை திட்டத்தின் கீழ் பயனாளிகளால் இணைக்கப்படாத வீட்டு இணைப்புகள் 12000 எண்ணிக்கையினை பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் இணைக்கவும், அதற்கான செலவினத் தொகை ரூ.650.00 இலட்சத்தினை வட்டியில்லாத கடனாக தமிழ்நாடு நகர்ப்புற சேவை கட்டமைப்பு நிதி இணையம் மூலம்பெறவும் பணிகள் முடிந்த பிறகு வீட்டு உரிமையாளரிடம் இருந்து தவணை முறையில் வசூல் செய்து கொள்ளவும், நகராட்சி நிர்வாக ஆணையாளர் சேப்பாக்கம் சென்னை அவர்களுக்கு புதிய அனுமதி வேண்டி பிரேரணை அனுமதி மேற்கண்டவாறு பாதாளச் சாக்கடை வீட்டு இணைப்புகள் பெறாத பயனாளிகளுக்கு வீட்டு இணைப்புகள் வழங்கிடவும் அதற்கான செலவினத் தொகை முதற்கட்டமாக ரூ.650.00 இலட்சத்தினை தமிழ்நாடு நகர்ப்புற சேவை கட்டமைப்பு நிதி இணையம் மூலம் வட்டியில்லாத கடனாக பெறவும் பணிகள் முடிந்த பிறகு வீட்டு உரிமையாளரிடம் இருந்து தவணை முறையில் வசூல் செய்திடவும் மன்ற அனுமதி எண் 300 நாள் 09/02/2018 ல் பெறப்பட்டு, நிர்வாக அனுமதி நகராட்சி நிர்வாக ஆணையாளர் , சென்னை அவர்கள் ஒப்புதல் ஆணை எண் 4774/UGSS/1/2018 நாள் 26/02/2018 பெறப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் ஆணையாளர் , சென்னை அவர்களால் தொழில் நுட்ப அனுமதி எண்18281 /2016/DOI நாள் 05.03.201 ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் 18.04.2018ல் கோரப்பட்டு மேற்கான் பணியினை M/s.VVV Construction Pvt Lmited,Chennai அவர்கள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தததாரர் அளவுகோல் பிரகாரம் 12 மாதத்திற்க்குள் முடிக்க கோரியும் பணிகளை உரிய கால கெடுவிற்குள் போதிய பணியாளர்களை கொண்டு உள் குழாய் கழிவுநீர் வீட்டு இணைப்புகள் 31.03.2019 வரை 1167 எண்ணிக்கை மட்டுமே செய்யப்பட்டுள்ளது.