மின் ஆளுமை

கணினிமயமாக்கல் மற்றும் மின் ஆளுமை

வாணியம்பாடி நகராட்சியில் மின்ஆளுமை என்பது இணையதளம் மூலம் பொதுமக்கள் சேவை வழங்குவதையும், அனைத்து நிலைகளுக்கும் தகவல்களை வழங்குவதையும், செயல்திறனைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரியைச் செலுத்த, சான்றிதழ்கள், கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல்கள், ஒரு வணிகத்தை நடத்துவதற்கும் மற்றும் பொதுமக்கள் குறைகள் தொடர்பான செயல்பாடுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அணுகுவது நடைமுறையில் உள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் நகராட்சி தகவல் மற்றும் வரி வசூல் சேவைமையத்தில் சாத்தியமாக்கப்பட்டுள்ளன

மின் ஆளுமை மூலம், வாணியம்பாடி நகராட்சியின் சேவைகளை எளிதான, வெளிப்படையான, பொறுப்புணர்வு மற்றும் விரைவானதாக மாற்ற முடியும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துலிருந்துந்தபடி அவர்களின் நிலுவைத் தொகை மற்றும் வருவாய் உருவாக்கம் வேகமாகவும் எளிதாக செய்திட நடைமுறையில் உள்ளது.

நமது நகராட்சியில் கையேடு பதிவுகள் அனைத்தும் புதுமையான முறையிலும் எளிமையான நடையிலும் புதுப்பிக்கப்பட்டு பின்வரும் சேவைகள் அனைத்தும் சிறப்பான முறையில் கணினிமயமாக்கப்பட்டுள்ளன

1. சொத்து வரி

2. குடிநீர்க் கட்டணம்

3. தொழில்முறை வரி

4. வரி மற்றும் வரி இல்லாத (குத்தகை

இனங்கள்)

5. பிறப்பு மற்றும் இறப்பு

6 . நிதி கணக்கியல் முறை

7 வர்த்தக உரிமங்கள்

8. கட்டிடத் திட்ட ஒப்புதல்கள்

9. வாகனங்கள்

10. திடக்கழிவு மேலாண்மை

11. குறைகள் நிவர்த்தி

12. நகராட்சி சொத்துக்கள்

13. நகராட்சி தணிக்கை

14. நகராட்சி கூட்டப்பொருள்

15. கிடங்கு மற்றும் பொருட்கள்

விபரப்பட்டியல்

16. பணியாளர் தனி சேவை

17. சட்டமன்ற வினா மற்றும் பதில்கள்

18. சம்பளப்பட்டியல் மற்றும் பணியாளர்

தகவல்

19. வழக்குகள்

20.கோப்புகள் நிர்வாகம்