குடிநீர் விநியோகம்

நகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகள்

குடிநீர் விநியோகம்

        இந்நகராட்சிக்கு மக்கள் தொகை அடிப்படையில் 90LPCD என்ற அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 8.58MLD குடிநீர் தேவைப்படுகிறது.  இந்நகராட்சிக்கு நீர் ஆதாரமாக அருகில் உள்ள பாலாற்றில் இருந்து 15 நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு கொடையாஞ்சி, இராமையன் தோப்பு மற்றும் வடக்குப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் சாதாரண நாட்களில் 70LPCD என்ற அளவிலும் கோடைக் காலங்களில் 50 LPCD என்ற அளவிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் சாதாரண நாட்களில் 2 நாட்களுக்கு ஒரு முறையும். மேலும் நகராட்சி பகுதிகளில் உள்ள 285 கைப்பம்புகள், 210 மினிபவர் பம்புகள் மூலம் இதர தேவைகளுக்கான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நகராட்சியில் தற்போது 7500 குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் 144 பொதுக் குழாய்கள் உள்ளது.

        தற்போதுள்ள குடிநீர் திட்டம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், இதன் தற்போதைய திறன் குறைந்துவிட்ட்தாலும், மேலும் மக்கள் தொகை பெருகிவிட்டதாலும், இந்நகராட்சிக்கு உட்பட்ட 11 நகராட்சிகள், 1 மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு மேட்டூரிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1295 கோடி திட்ட மதிப்பீட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் நகராட்சி பங்குத்தொகையாக ரூ.47.26 கோடியில் இப்பணி  2015 ம் ஆண்டு முடிவடைந்து தினமும் 44 இலட்சம் குடிநீர் பெறப்பட்டு பொது மக்களுக்கு நகராட்சியின் பாலாறு நீர் ஆதாரத்துடன் சேர்ந்து 90LPCD அளவில் குடிநீர் முழுமையாக வழங்கப்படுகின்றது.

           இந் நகராட்சியில் பொது மக்களால் தெரிவிக்கப்படும் குடிநீர் தொடர்பான புகார்கள் சரி செய்ய பொறியியல் பிரிவில் பதிவேடு பராமரிக்கப்பட்டு பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது.

 

தலைமைநீரேற்று நிலையம்

குடிநீர் விநியோகம்