எங்களை பற்றி

வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

இது வேலூர்க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.

புவியியல்

12.68°வடக்கு 78.62°கிழக்கு [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது [5]

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,061 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர்.             6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , தமிழ்ச் சமணர்கள் 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

பார்த்த நாள் 2013-08-08.

மாநகராட்சி வேலூர் மாநகராட்சி
நகராட்சி ஆம்பூர் · அரக்கோணம்  · ஆற்காடு  · குடியாத்தம் · வாணியம்பாடி  · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு
இணையதளம் commr.vaniyambadi@tn.gov.in