கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
- தவளகிரிஸ்வரர் கோயில்
“தவளகிரிஸ்வரர்” என்று அழைக்கப்படும் இந்த கோயில் வந்தவாசியில் இருந்து 5 கிலோ மீட்டர் அளவில் வெண்குன்றம் மலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. நவம்பர் / டிசம்பர் மாதங்களில் புகழ்பெற்ற கார்த்திகை தீபம் திருவிழா கொண்டாடப்படுகிறது, வந்தவாசி சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலிருந்து சுமார் 1.00 லட்சம் மக்கள் இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர், அன்று மாலை “மஹா தீபம்” மலையின் உச்சியில் ஏற்றப்படும்.
- தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்
வந்தவாசிக்கு அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் தென்னாங்கூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பாண்டுரங்கன்-ராதைகோவில் வடநாட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
3. மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில்
வந்தவாசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சேத்பட் ரோடு பகுதியில் மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில் பிரசித்திபெற்று பிரபலமாக அறியப்படுகிறது.
4.தெள்ளாறு
வந்தவாசிக்கு தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லவ மன்னன் நந்திவர்மன் மேல் நந்திகலம்பகம் இயற்றப்பட்ட இடமான தெள்ளாறு அமைந்துள்ளது.
- மேல்மருவத்துர் ஆதிபாராசக்தி அம்மன் கோயில்
வந்தவாசியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மருவத்துர் ஆதிபாராசக்தி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
- காஞ்சிபுரம் கோயில்
வந்தவாசிக்கு வடக்கு திசையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பல்லவ பேரரசின் தலைநகரமாகவும், காஞ்சிவரதராஜபெருமாள், அத்தி வரதர் என உலகளவில் பிரபலமாக பிரசித்திபெற்ற கோவில் நகரமாகவும், பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் திருத்தலம் அமைந்துள்ளது.