காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து    (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.   இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.  இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.

  1. அரசு தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது.  ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது.   இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.   இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும். இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது.   இங்கு வருடத்திற்கு 140 செ,மீ மழை பெய்யும். இங்கு கூடிய வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் காணப்படுகின்றது.  இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.   இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும். இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது.   இங்கு வருடத்திற்கு 140 செ,மீ மழை பெய்யும். இங்கு கூடிய வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் காணப்படுகின்றது.

  1. ஊட்டி ஏரி

ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.   இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும். ஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் வெட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் கரை உடைந்து மூன்று சந்தர்ப்பங்களில் நீரின்றிப் போயுள்ளது. ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.   இந்த ஏரியின் அசலான பரப்பளவு குறைந்து போயுள்ளது, காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம்,   ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்து ஏரியின் பரப்பளவு சுருக்கப்பட்டுவிட்டது. ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வசம் வந்தது.

3.   கற்பூர மரம்

உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

  1. நீலகிரி மலை

நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்

நீலகிரி மலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும் . இது மலைகளின் ராணி என்று சிறப்பிக்கப்படுகிறது . இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும். இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் நீலகிரி என பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும்

5.தோடர் பண்டிகை

தோடர்கள் (Todas) அல்லது தொதுவர்]  என்பவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1,600 பேர் மட்டும் பேசக்கூடிய ‘தொதவம்’ என்ற மொழியைக் கொண்ட சிறு பழங்குடி இனத்தவர் ஆவர்.

ஆய்வாளர்கள் இவர்களைத் ‘தோடா’ என்றே பதிவுசெய்துள்ளனர். ஆனால் எந்தத் தொதவரும் தம்மைத் ‘தோடா’ என்று சொல்லிக்கொள்வதில்லை. மாறாகத் தூதா, தொதவா, ஒள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.  தொதவர் என்பதற்குப் பொருள் ‘மக்கள்’ என்பதாகும். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம்மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.  இவர்களுடைய வீடு, கோயில் போன்றவை அரைவட்ட வடிவமானவை. வீடுகளின் நுழைவாயில் மிகமிகச் சிறியது. நன்கு குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குளிரைத் தவிர்ப்பதற்கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு எனப்படுகிறது. இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இந்த மக்களுடைய மொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள். இவர்கள் நீலகிரியின் பைகாரா ஆற்றை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

இவர்களின் வாழ்விடச்சூழலில் அதிக பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி திசம்பர் மாதம் மொற் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதற்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் மூன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவ கோயில் மற்றும் ஓடையாள்போ என்ற கோயில்களில் ஆண்கள் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர்.

தோடர்கள் தாங்கள் வணங்கும் தெய்வமான கம்பட்ராயன் சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியவர்கள் என்று நம்புகின்றனர். நாவல் மரத்தை, புனிதமான மரமாக மதிக்கின்றனர். தாங்கள் வாழும் குடியிருப்பை மந்து என்று அழைக்கின்றனர்.

 தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.

தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடைக்கு பூத்துக்குளி என்று பெயர். விழாக் காலங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தோடர் மக்கள் பங்கேற்பர். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால் பூ வேலைப்பாடுகள் கொண்டிருக்கும். தோடர் இனப் பெண்கள் கையால் பின்னும் பூத்துக்குளி உடைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்

சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். அதன்பின் கோவையில் உள்ள பழமையான பேரூர் மடம் சென்று, தவத்திரு ராமலிங்க அடிகளாரைச் சந்தித்து, துறவு மேற்கொண்டார், ஏகாம்பர சுவாமிகள்.
இவருக்குப் பிறகு வந்த நிரஞ்சனப் பிரகாச சுவாமிகளுக்கு, காசி விசுவநாதர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ராயபோயர் என்ற சிவனடியாரும், அவர்தம் மனைவியான கற்பகத்தம்மையாரும் இந்தப் பணியில் இணைந்தனர். மஞ்சம்மாள் என்பவர் தலைமையில், அடியார்கள் ஆதரவில் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. கி.பி. 1913-ல் யோகீந்தர் ஓம்பிரகாச அடிகளார் தலைமையில் பாலதண்டாயுதபாணி சிலை நிறுவப்பட்டது. இம்மடத்தின் பெருமை அறிந்து பயனடைந்த, ஜெய்ப்பூர் அரசி ராஜராஜேசுவரி, 1932-ல் அருளுரை மண்டபம் அமைத்துத் தந்தார். இதன்பின் 1935-ல் யோக தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது.

இவ்வாலயத்திற்கான சிவலிங்கத்தினை நர்மதை நதியில் இருந்து நான்முகன், திருமால், தேவர்கள் ஆகியோர் வழிபட்ட பூணூல் ரேகை தாங்கிய பாணலிங்கம், 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டது. இதன்பின் சில அடியார்களின் ஆதரவோடு திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு விழா நடந்தேறியது. ஆலய வளாகத்தில் சித்தர்கள் நினைவாலயம், காசி விசுவநாதர் திருக்கோவில் என இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.

ஆலயஅமைப்பு

ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும். கொடிமரத்தில் கலைநயம் மிக்க நந்திகள், பலிபீடம், நந்திதேவர் ஒருங்கே அமைந்துள்ளன. மகாமண்டபம் தாண்டியதும், கரு வறையில் நர்மதை நதியில் கிடைத்த பாணலிங்கம் நம்மை வரவேற்கிறது. இறைவன் கிழக்கு முகமாகப் புதுப்பொலிவோடு காட்சி அருளுகிறார். சன்னிதியில் தெற்கு நோக்கிய அன்னை விசாலாட்சி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.

இதுதவிர வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, கங்கை அம்மன், சனி பகவான், காலபைரவர், நவக்கிரகங்கள், பாண்டுரங்கன், தத்தாத்ரேயர், கனகசபை, ஓங்காரம் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. கருவறை சுற்றில் லிங்கோற்பவர், பிரம்மா, சண்டிகேசுவரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தின் மறு பகுதியில் சித்தர்கள் நினைவாலயம், ஆறு சித்தர்களின் சமாதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

7.   தூய ஸ்தேவானின் ஆலயம், ஊட்டி .

தூய ஸ்தேவானின் ஆலயம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் மைசூர் – ஊட்டி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழைய தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதன் வரலாறு 19 ஆம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அப்பொழுது சென்னை மாகாண ஆளுநராய் இருந்த ஸ்டீபன் ரும்போல்ட் லஷிங்க்டன் (Stephen Rumbold Lushington) என்பார் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் ஒரு தேவாலயம் வேண்டும் என்று நினைத்ததன் விளைவாக 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் 23இல் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நாள் ஜார்ஜ் IV  எனும் ஆங்கில அரசரின் பிறந்த நாளாகும். இத்தேவாலயமானது 1830 ஆம் ஆண்டு நவம்பர் 5 ,தேதியில் கொல்கத்தாவின் அப்போதைய பேராயர் (தலைமைப் போதகர்) ஜான் மத்தியாஸ் டர்னர் (John Mathias Turner) அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது . பொதுமக்களின் உபயோகத்திற்காக 1831 ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் நாள் ஈஸ்டர் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டது. 1947 இல் தென் இந்திய திருச்சபையின் கீழ் வந்தது. அப்போது சென்னை படை பிரிவின் தலைவர் ஆக இருந்த ஜான் ஜேம்ஸ் அண்டர்வுட் என்பார் கட்டிட வடிவமைப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இத் தேவாலயத்தின் முக்கிய தூண் மற்றும் கட்டுமான மரங்கள் ஸ்ரீரங்கம் திவீல் இருந்த திப்பு சுல்தான் அரசரின் அரண்மனையில் இருந்து எடுத்து வரப் பட்டதாகும். இந்த கட்டுமான பொருட்கள் சிகுர் மலைத் தொடர்கள் வரை எடுத்து வரப் பட்டன. இக் கட்டுமானப் பணிக்கு ஜே.ஜே. அண்டர்வுட் என்பார் பொறுப்பாளராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இதன் கட்டுமான செலவு 24,000 ஆகும். 1829 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப் பட்டது. மேற்கு பகுதியில் உள்ள சுவரில் கடைசி உணவு எனப் படும் ஓவியம் காணப்படுகிறது. இது கதவின் மேலே உள்ள பகுதி ஆகும். இத் தேவாலயத்தில் உள்ள வண்ண கண்ணாடி ஜன்னல் கதவுகளிலும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணக் காட்சி மற்றும் மேரி குழந்தை ஏசுவை தன் கையில் வைத்திருக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கோபுரத்தில் எல்லா தேவாலயங்களிலும் காணப் படும் கோயில் மணிக்குப் பதிலாக ஆங்கில எழுத்து வீ வடிவத்தில் உள்ள மரப்பலகைகளுக்கு இடையில் நான்கு சுத்தியல் போன்ற அமைப்புக் காணப்படுகிறது. இவற்றில் கயிறு பிணைக்கப் பட்டுள்ளது. இதை நாம் தரையில் இருந்து பிடித்து இழுக்கும் போது இசை உருவாகிறது. இங்கு ஒரு பிரசங்க பீடம் உண்டு அதற்கு செல்ல தேவாலயத்தில் உள்ள வழிபாட்டு மேடையின் இடது பக்கத்தில் உள்ள படிக்கட்டு வழியாக செல்ல வேண்டும்.  இம்மேடையில் வழிபடும் இருக்கை வரிசைகளும் வழிபாட்டுக்கு உபயோகப்படுத்தும் ஆடைகள் வைக்கும் அறையும் காணப்படும்.