நகரத்தை அடைவது எப்படி

உசிலம்பட்டியை அடைய

விமானம் மூலம்

உசிலம்பட்டியிலிருந்து 50 கி.மீ தொலைவில் மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது. உள்நாட்டு அல்லது பன்னாட்டு விமானங்கள் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 85 ல் மேற்கு திசையில் நான்கு சக்கர வாகனத்தில் ஒரு மணி நேர பயணத்தில் வந்தடையலாம்

ரயில் மூலம்

மேற்கே 34 கி.மீ. தொலைவிலுள்ள தேனியிலிருந்து பயணிகள் தொடருந்து உசிலம்பட்டி வழியாக 96 கி.மீ. பயணித்து மதுரை சந்திப்பிற்கு அடைகிறது.

தற்போது இரயில் பாதை அகல பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே  தற்சமயம் இரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவில் இரயில் சேவை தொடங்கவுள்ளது.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளது.