காண வேண்டிய இடங்கள்

திடியன் மலைக்கோவில்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது திடியன் கிராமம். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில். தடித்த வார்த்தைகளைப் பேசி சாபம் பெற்ற சில முரடர்கள், தங்களின் சாபம் தீர இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் இருந்த கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மலையை வலம் வந்து சாபம் தீர்ந்தனர். தடியர்கள் சாபம் தீர்ந்த தலம் ஆதலால் அது ‘திடியன் மலை’ என்று பெயர் பெற்றது என்கிறது தல வரலாறு.

திடியன் மலை

 

58 கிராம பாசனக் கால்வாய்

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டதால், இதற்கு `58 கிராமப் பாசனக் கால்வாய்’ என்று பெயர் வந்தது.

உசிலம்பட்டி பகுதி கிராமங்கள். வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளாகும். வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது, வெள்ளமெனப் பெருக்கெடுத்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் சென்று சேர்ந்து பின்னர் வங்கக்கடலில் கலக்கும். குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல், வானம்பார்த்த பூமியாக இருந்த உசிலம்பட்டி பகுதி கிராமங்கள்,  வைகை ஆற்று நீரை வைகை ஆற்றை ஒட்டிய கிராம பகுதிகளும் பயன் பெற 1996 ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, 1999 ம் ஆண்டு பணிகளும் தொடங்கின. கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த கால்வாய் அமைக்கும் பணி தற்போது முடிக்கப்பட்டு அக்கல்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மொத்தம் 58 கிராமங்கள் போராடி திட்டத்தைக் கொண்டுவந்ததால் இத்திட்டத்துக்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது.

``58 கிராம பாசனக் கால்வாய்!” - பெயர்க்காரணமும் 50 ஆண்டுக்கால போராட்ட வரலாறும்!