Prevention and Management Activities

திருமங்கலம் நகராட்சி

கொரோனா வைரஸ்நோய் தடுப்பு நடவடிக்கை விபரம்

திருமங்கலம் நகராட்சியில் மொத்தம் 271 பணியாளர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டை முகக்கவசம், கையுறை மற்றும் மேலுறை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்கு தேவையான லைசால் 9100லிட்டர், கைகழுவும் திரவம் (சோப்பு கரைசல்)500லிட்டர், பிளிச்சிங் பவுடர் 15000 கிலோ, சுண்ணாம்புத்தூள் 30000கிலோ, சோடியம் ஹைபோகுளோரைடு கரைசல் 2000 லிட்டர் மற்றும் கையில் தடவும் திரவம் (சேனிடேசர்)2000 எண்ணம் (100 மி.லி பாட்டில்கள்), மருந்து தெளிப்பபான் 10 எண்ணம்  மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்ட 4 எண்ணம்  சிறிய தெளிப்பான் 100 எண்ணம் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 27.03.2020, 5,6,7.04.2020 மற்றும்05.2020 ஆகிய தேதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் லைசால் மற்றும் 1ரூ சோடியம் ஹைபோகுளோரைடு கரைசல் பயன்படுத்தி நகர்பகுதி முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்படுகிறது.

 

கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த 3 இலகுரக வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தி விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

திருமங்கலம் நகராட்சியில் அவசர கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. அவரச அழைப்பு எண்-04549-280757 என்ற எண்ணை மக்கள் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பாதாகைகள், துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் பொதுமக்களுக்கு கைகழுவும்முறை மற்றும் முகக்கவசம் அணிவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
திருமங்கலம் நகராட்சியில் அம்மா உணவகம் மூலம் பொதுமக்களுக்கு சூடாகவும் சுவையாகவும் சுகாதார முறையில் வீடற்றவர்களுக்கும் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப தினமும் மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகிறது. நாளது தேதியில் சராசரியாக 1500 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

திருமங்கலம் நகராட்சியின் பொது இடங்களான அரசு மருத்துவமனை, அம்மா உணவகம், பேருந்து நிலையம், வங்கிகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள்,அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் அனைத்து வார்டுகளிலும் பிளிச்சிங் மற்றும் சுண்ணாம்பு கலவை தெளிக்கப்பட்டும், லைசால் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம் நகராட்சிப்பகுதியில் 5 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது உடல் நிலை குணமடைந்து திருமங்கலம் திரும்பிவிட்டனர்.

இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 8 வார்டுகளை (10,11,12,13,14,15,16,17) பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு4.2020 தேதிமுதல் 60 பணியாளர் காய்ச்சல் சளி இருமல் பற்றிய கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.  அரசாணை எண்.221, நாள் 04.05.2020ன்படி மேற்கண்ட கட்டுப்படுத்தப்பட்ட வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டு 13, 14 மற்றும் 15வது வார்டுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்காணிப்பில் உள்ளது.

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 21841 குடும்பங்களுக்கும் ஆர்செனிக் ஆல்பம்30 என்ற ஹோமியோபதி மாத்திரை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட்டது.

திருமங்கலம் நகராட்சியில் கபசுரகுடிநீர் அனைத்து வார்டுகளிலும் 27 வார்டுகள் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கொடுக்கப்பட்டு வருகிறது.  நகராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தினமும் வாழைப்பழம் மற்றும் சிங்க் மல்டிவிட்டமின் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து வரப்பெற்ற 57 நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனர்.