காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்திநவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளிசூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல்தைப்பூசம்சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசைசஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.