காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

  1. ரோச் பூங்கா, நேரு பூங்கா, துறைமுக கடற்கரை இவை எல்லா சனி மற்றும் ஞாயிறு கிழமை சாயங்கால வேளைகளிலும் இந்நகர குழந்தைகள் மற்றும் மக்களைக் கவரக்கூடிய முதன்மையான இடங்களாக உள்ளது.
  2. சிவன் கோவில்

இந்த கோவில் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.  இதன் அருகில் ஒரு தீபம் குளம் உள்ளது.  இந்த கோவில் இந்நகரத்தின் அனைத்து மக்களையும் கவரக்கூடியது.  ஆடி அமாவாசை, சஷ்டி மற்றும் சித்திரை தேரோட்டம் போன்ற முக்கிய பண்டிகைகள் மேள தாளத்துடன் கொண்டாடப்படுகிறது.

  1. பனி மய மாதா கோவில்

இந்த கோவில் மன்னார் வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டம் முழுவதும் பிரபலமானது.  ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இக்கோவிலின் திருவிழா அனைத்து மத மக்களையும் கவரக்கூடிய வகையில் கொண்டாடப்படுகிறது.  பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவிலின் தங்க தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

  1. துறைமுகம்

தூத்துக்குடி புதிய துறைமுகம் நகரத்திலிருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.  ஏற்றுமதி மற்றம் இறக்குமதிகளை கையாளுவதற்கு பிரபலமான துறைமுகமாகும்.  அங்கு ஒரு மீன்பிடி துறைமுகம் உள்ளது.  தூத்துக்குடி உப்பு உற்பத்திக்கு புகழ்பெற்றது.  மேலும் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் இங்கு ஸ்பிக், ஸ்டெர்லைட், அனல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் கன நீர் நிலையம் போன்ற தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.