மழைநீர் வடிகால்

தற்போது மழைநீர் வடிகால் கால்வாய்கள் மூலம் தேவையற்ற கழிவுநீர் தேக்க பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேற்படி நகர்புற கழிவுநீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக கழிவுநீர் கொண்டு செல்லும் அளவு குறைவாக உள்ளதால் சீரான நீரேட்டம் குறைந்துவிடுகிறது.  இதனால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

நகராட்சி மழைநீர் வடிகால் முறை

திருப்பத்தூர் நகரில் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிரந்தர மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.  மேற்படி கால்வாய்கள் மூலம் பெரும்பாலான பகுதிகளில் தேவையற்ற கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.  இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது.  இவற்றை உள்ளாட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்க வேண்டியுள்ளது.

கால்வாய் வகைப்பாடு நீளம் (கி.மீ)
திறந்தவெளி கால்வாய்கள் 42.966
சீரற்ற கால்வாய்கள் 28.786
மொத்த கால்வாய்கள் 71.752
கழிவு நீர் கால்வாய் வசதியற்றவை 5.450
மொத்த சாலைகள் நீளம் 91.861