மத்திய ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் (ஐ.டி.எஸ்.எம்.டி) அரசிடமிருந்து கடன்பெற்று (1) நகர புல எண். 500 மற்றும் 501/2 வார்டு எண்.-2, பிளாக் எண் 8-ல் முதல் கட்டமாக “பி” வகுப்பு பேருந்து நிலையம் மற்றும் கடைகள் கட்ட ரூ-41 லட்சம் மதிப்பீட்டிற்கும் (2) நகர புல எண். 15/2ஏ, வார்டு எண்-1, பிளாக் எண்-3, புதிய வாரச்சந்தை கட்ட ரூ-25 இலட்சம் மதிப்பீட்டிற்கும் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களால் தம்முடைய செயல்முறைகள் ந.க.எண்.51885/90/யிபி2, நாள் 05.10.1991-ல் அனுமதிக்கப்பட்டு கீழ்க்கண்டுள்ள விவரப்படி கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. (ந.க.எண்.11239/91இ1)
புதிய பேரூந்து நிலையத்தில் முதல் கட்டமாக கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் இதர கட்டிடங்கள் விபரம் பின்வருமாறு இவைகள் 12.03.1995 முதல் பயனுக்கு கொண்டு வரப்பட்டது.
1 | கடைகள் | 196 |
2 | பெண்கள் தங்குமிடம் | 1 |
3 | ஆண்கள் தங்குமிடம் | 1 |
4 | உணவகம் | 1 |
5 | கட்டண கழிப்பிடம் | 2 |
6 | குளியல் அறை | 2 |
7 | நேரம் காப்பாளர் அறை | 1 |
2) வாரச்சந்தை கடைகள் விபரம்.
இவைகள் 23.05.1994 முதல் பயனுக்கு கொண்டு வரப்பட்டது.
நிரந்தர கடைகள் .. 21
திறந்தவெளி கடைஎண் .. 159