வீடுகள் வாரியாக குப்பைகளை சேகரித்தல் மற்றும் பிரித்தெடுத்தல்
திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கியதாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கட்தொகை 83612 ஆகும். 2018-ம் வருடத்திய மக்கட்தொகை 90615 ஆகும். இந்நகரில் 16750 குடியிருப்புகளும் மற்றும் 1982 வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்நகரின் பரப்பளவு 9.79 ச.கி.மீ. ஆகும்.
- தினசரி வீடுகள்தோறும் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
- மக்காத குப்பை வாரத்தில் ஒருநாள் அதாவது புதன்கிழமைகளில் சேகரிக்கப்படுகின்றன.
- கேடு விளைவிக்கக்கூடிய குப்பைகள் நேப்கின் மற்றும் டையாபர் ஆகியவை மக்கும் குப்பைகளோடு தனியாக சேகரிக்கப்படுகின்றன.
- மின்னனு கழிவுகள் மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய வீட்டு குப்பைகள் மற்றும் சி & டி குப்பைகள் சேகரிக்க பயிற்றுவிக்கப்படும்.
- வீடுகளில் குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்து பரப்புரையாளர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
வீடுகள்தோறும் குப்பைகளை சேகரித்தல் மற்றும் பிரித்தெடுத்தல்
வீண் குப்பை உற்பத்தி செய்யப்படுதல் 30 TPD வீடுகள் தோறும் சேகரித்தல் % 100% தரம் பிரித்தல் % 82% வீண் குப்பைகள் உற்பத்தியாகும் அளவு
- திருப்பத்தூர் நகராட்சியில் நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 300 கிராம் வீதம் மொத்தம் 30 MT குப்பைகள் உற்பத்தியாகிறது. மூன்று விதமான இடங்களில் அதாவது குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள் மற்றும் குடிசைப்பகுதிகள் ஆகியவற்றில் வார நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மாதிரி சர்வே நடத்தப்பட்டு பல்விதமான குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் கீழ்காணும் பட்டியலில் தெரிவிக்கப்படுகிறது.
Source of waste No. of HH/Assessment Per Capital waste generation (in grams) Waste Generation in TPD Inert waste & silt (TPD) Total waste Generated in TPD Wet waste Dry waste Total Domestic 16750 300 16.00 6.00 22.00 3.00
30.00
Commercial 1970 — 1.00 2.00 3.00 BWG 12 — 1.00 1.00 2.00 Total 18722 300 18.00 9.00 27.00 சேகரித்தல் மற்றும் அப்புறப்படுத்துதல்
- நாள் ஒன்றுக்கு 3 Trips வீதம் பேட்டரி வாகனங்கள் (400 HH) உபயோகப்படுத்தப்படுகின்றன
- நாள் ஒன்றுக்கு 3 Trips வீதம் LCVs (இலகு ரக வணிகபயன்பாடு வாகனங்கள்) (1200 HH) உபயோகப்படுத்தப்படுகின்றன.
- வீடுகளிலிருந்து நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேற்கண்ட பணி
- 36 BOVs மற்றும் 6 LCVs மூலம் 16750 வீடுகளிலும்
- 2 Tipper Lorry மூலம் 1982 வணிக நிறுவனங்களிலிருந்தும்
- இரண்டாம் நிலை சேகரிப்பு மற்றும் கொண்டு செல்லுதல் சீரான முறையில் செயல்பட்டு வருகிறது.
- மார்க்கெட் கழிவுகளுக்காக ஒரு 1 Tipper லாரியும், கட்டுமான கழிவுகள் சேகரிப்பிற்காக 1 டிப்பர் லாரியும் பயன்படுத்தப்படுகிறது.
- திருப்பத்தூர் நகராட்சியில் அதிக குப்பைகள் உற்பத்தியாகும் இடங்களான 11 உணவகங்கள் மற்றும் ஒரு கல்வி நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளன.
- திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் CPHEEO Manual ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி அதிக குப்பைகள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
- நாளொன்றுக்கு 2 டன் அதிக குப்பைகள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து குப்பைகள் அகற்றும் பணியை அவர்களிடம் உள்ள வசதிகளைகொண்டு கையாளப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ல் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்நகராட்சியில் 7 சதவீதம் குப்பைகள் சேகரிக்கும் நிலையிலேயே குறைக்கப்படுகிறது. திடக்கழிவு அப்புறப்புறப்படுத்தும் செயலாக்க நிலை
- பகுதியாக கையாண்டு உரமாக மாற்ற செயல்படுத்துதல்
- நாளொன்றுக்கு 4 டன் செயலாக்கம் திறன் கொண்ட பல்மையப்படுத்துல் அடிப்படையில் நகர பகுதிகளில் Window Composting center 5 முதல் 10 வார்டுகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மறு சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு துப்புரவு பணியாளர்களாலே விற்கப்பட்டு அதன் பயனை பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது.