சாலைகளின் இணைப்பு விவரம்
திருப்பத்தூர் நகரம், வேலுர் மாநகரத்திலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்ட சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 கி.மீ.தொலைவில் ஜோலார்பேட்டை இரயில்வே சந்திப்பு நிலையம் அமைந்துள்ளது. 20 முதல் 25 கி.மீ. சுற்றுப்புற இடங்களை ஈர்க்கும் வகையில் நகர ஈர்ப்பு மையமாக விளங்குகிறது. மேலும் இந்நகரமானது கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், பர்கூர், நாட்றம்பள்ளி. ஜவ்வாது மலைத்தொடர் மற்றும் ஏலகிரி மலை ஆகிய சுற்றுலா தளங்கள் அருகாமையில் அமைந்துள்ளது. மற்றும் சுற்றியுள்ள 200 கிராம மக்களின் அடிப்படை தேவைகளுக்கான அனைத்து வசதிகளையும் பெரும்பொருட்டு இந்நகரையே சார்ந்துள்ளனர். விவசாய விளைபொருட்கள் மொத்த உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
உள்ளூர் சாலைகளின் இணைப்பு விவரம்
தள வகைபாடு மொத்த நீளம் (கி.மீ)
சிமெண்ட் தளம் – 30.698
தார் தளம் – 46.948
கருங்கல் சாலை – 4.917
மண் சாலைகள் – 9.298
மொத்தம் – 91.861