சந்தைகள்

நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பல்வகை வணிக பயன்பாட்டிற்கான காய்கறி கடைகள், கறி கடைகள், மாட்டுக்கறி கடைகள், மீன் மார்க்கெட், சிறிய கடைகள் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன.  தற்போது தினசரி காய்கறி மார்க்கெட் திருப்பத்தூர் – வாணியம்பாடி நெடுஞ்சாலையில் தூய நெஞ்சக் கல்லூரியின் எதிர்புறம் வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ளது.  மேற்படி வளாகத்தில் 159 திறந்தவெளி காய்கறி கடைகள் உள்ளடக்கியதாகும்.  பல்வகை வணிக பயன்பாட்டு நடவடிக்கைகள்   பழனிசாமியார் ரோடு,  துரைசாமியார் ரோடு, ஜின்னாரோடு ஆகியவற்றில் குவிந்துள்ளன.