காண வேண்டிய இடங்கள்

ஆர்வமிக்க இடங்கள்

கோவில்கள் மற்றும் இதர ஆர்வமிக்க இடங்கள்
திருப்பத்தூரில் பழைய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழ்நோக்கி பாய்கிறது. மலைப்பகுதிகளில் உள்ள பல மூலிகைச் செடிகள் வழியாக நீர் வீழ்ச்சி வருவதால் இந்நீர் வீழ்ச்சியில் குளிப்பதால் நோய்களைக் குணப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மேற்படி நீர்வீழ்ச்சிக்குச்செல்ல மலைப்பாதையும் மற்றும் சாலை வசதியும் உள்ளன. ஏலகிரி புங்கனூர் ஏரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நிலாவூரிலிருந்து 6 கி.மீ. மாலைப்பாதையில் 1.30 மணி நேரம் பயணித்தால் மேற்படி நீர்வீழ்ச்சியை அடையலாம். மலைப்பாதை சற்று கடினமாக இருந்தாலும் நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தாக்கை காண்பது உண்மையில் பிரமிப்பாக இருக்கும். நீர்வீழ்ச்சிக்கு மலைப்பாதை மூலம் செல்ல உள்ளுர் வழிகாட்டிகள் உள்ளனர்.

திருப்பத்தூர் இரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள ஜோலார்பேட்டி இரயில்வே ஜங்ஷன் மிகப்பெரிய ஜங்ஷன்களில் ஒன்றாகும்.

ஏலகிரி மலை
சுற்றுலா தலமான ஏலகிரி மலை திருப்பத்தூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பூங்கா மற்றும் படகு இல்லம் அமைந்துள்ளன. சிறுவர்களைக் கவரச்கூடிய சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் ஆகியவை உள்ளன.