காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
1. அர்த்தநாரீஸ்வரர் கோயில்
“அர்த்தநாரீஸ்வரர் கோயில்” என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற இந்து கோயிலாகும், இது தென் கிழக்குப் பகுதியில் 580 மீட்டர் உயரமுள்ள மலையின் மேல் அமைந்துள்ளது. கோயிலின் பரப்பளவு 5 ஹெக்டேர். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் வைகாசி விசாக தேர்த் திருவிழா நடை பெற்று வருகிறது. இந்த திருவிழா 15 நாட்கள் நடைபெறும். திருவிழா காலங்களில் அநேகர் கிரிவலம் சென்று வருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து அனேக மக்கள் இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர்,
2. கைலாசநாதர் கோவில்
கைலாசநாதர் கோவில் நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 76 அடி உயரம் கொண்டது.
3.மற்ற இதர கோவில்கள்
ஆறுமுகசாமி கோவில்
வீரபத்திர கோவில்
பசுவன் கோவில்
மலைபாதை நகர் அய்யனார் கோவில்
ஆறுபாதம் படி சுப்ரமணியம் கோவில்