சீர்காழி நகராட்சி
குடிநீர் விநியோகம் :
சீர்காழி நகராட்சி 1980- ஆம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சி தற்போது 24 வார்டுகளை உள்ளடக்கியதாகவும் 13.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 34880 மக்கள் தொகை கொண்டதாகவும் உள்ளது.
குடிநீர் ஆதாரம் :
நகராட்சி பொதுமக்களின் தேவைக்கான குடிநீர் நகராட்சியிலிருந்து 16.10 K.M தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆறு சித்தமல்லியிலிருந்து பெறப்படுகிறது.
குடிநீர் தேவை :
நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் என்ற அடிப்படையில் நகராட்சியின் தினசரி குடிநீர் தேவை 3.14 மில்லியன் லிட்டர் ஆகும்.
குடிநீர் திட்டம் :
இந்நகராட்சிக்கென தனித் குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.
இந்நகராட்சியில் தற்போது கொள்ளிடம் ஆற்றிலிருந்து 2.14 மில்லியன் லிட்டர் குடிநீரும்,உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் 0.43 மில்லியன் லிட்டர் குடிநீரும் ஆக மொத்தம் 2.57 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி பெறப்பட்டு சராசரியாக நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 74 லிட்டர் வீதம் தினசரி காலையில் 2 மணி நேரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலை :
தற்போது அதே நிலையில் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.