சோளிங்கர் நகராட்சி
சோளிங்கர் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.
21.02.1943 –ல் முதல் நிலை பேரூராட்சியாக இருந்து 22.12.1981 –ல் தேர்வுநிலை பேரூராட்சியாகவும் 14.06.2004 –ல் முதல் சிற்றூராட்சியாகவும் 19.07.2006 முதல் தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.
01.11.2021 தேதியிட்ட அரசானை எண் 94 -ன் படி சோளிங்கர் நகராட்சி 17.12.2021 அன்று உருவாக்கப்பட்டது. இது 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் சுற்றளவு 9,50 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 2011 ஆண்டு கணக்குப்படி 30856 ஆகும்.
சோளிங்கர் பேரூராட்சியாக இருந்து சோளிங்கர் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இவ்வலுவலகம் சோளிங்கர்-சித்துர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சோளிங்கர் நகரம், சோளிங்கர் தாலுக்காவின் தலைமையிடமாகும். இது பிரேக்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட் தொழிற்பேட்டையின் அருகில் உள்ளது. இது அரக்கோணத்திற்கு கிழக்கில் 28 கி.மீ. தொலைவிலும் மற்றும் வேலுரருக்கு 58 கி.மீ. தொலைவிலும், மேலும் மேற்கில் சித்தூருக்கு 38 கி.மீ. தொலைவிலும், திருத்தணி 26 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் இரயில் நிலையம் உள்ளது. இதன் வழியாக சென்னை-பெங்களுரு இரயில்கள் நின்று செல்கின்றன.
கடிகாசலம் என்ற புரணப்பெயருடைய சோழசிம்மபுரம் வைணவ ஸ்தலங்களில் 108-ல் ஒன்றாகும். இது தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கும் திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்வியஷேத்ரமாகும். சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம், இன்று ‘சோளிங்கர்’ என்று அழைக்கப்படுகிறது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
72 சித்தூர் சாலை, சோளிங்கர்
சோளிங்கர் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் – 631 102.
தொலை பேசி எண் : 04172-262335
மின்னஞ்சல் : commr.sholingar@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04175-237047
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
![]() |
திருமதி. மீ ச . ப்ரீத்தி.,
நகராட்சி ஆணையாளர் (பொ) ,
சோளிங்கர் நகராட்சி.
72 சித்தூர் சாலை,
சோளிங்கர், சோளிங்கர் வட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம் – 631 102
தொலை பேசி : 04172-262335,
அலைபேசி : 9150375354
மின்னஞ்சல் முகவரி : commr.sholingar@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : இராணிப்பேட்டை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 9. 50 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 30856 (2011-ன் படி)
ஆண்கள் :
பெண்கள் :
நகர விவரம் – தமிழ் மற்றும் ஆங்கிலம்

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு
