ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்
ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக இரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது. ராஜா தேசிங்கு `கப்பம்’ கட்ட மறுத்ததால், செஞ்சிக்கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் படையெடுத்து ராஜாவைக் கொன்றனர். ராஜா தேசிங்கின் உடல் எரிக்கப்பட்டபோது, அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.
இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ஆற்காடு பாலாற்றின் மறு கரையில் ராஜாவுக்கும், ராணிபாயிக்கும் பளிங்குக் கற்களால் மணிமண்டபங்களை எழுப்பினார். ராணியின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில்தான் `ராணிப்பேட்டை’ நகரையும் உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது
இராணிப்பேட்டை அருகிலுள்ள கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
வ.எண். | சுற்றுலா இடங்கள் மற்றும் கோயில்கள் |
சிறப்பு |
1 | சோளிங்கர் | லெட்சுமி நாராயணசாமி மலைக்கோயில் |
2 | திருத்தணிகை | முருகன் கோயில், அறுபடை வீடுகளில் ஒன்று. |
3 | திருப்பாற்கடல் | விஷ்ணு கோயில் |
4 | திருப்பதி | வெங்கடேஸ்வரா திருக்கோயில் |
5 | கனிப்பாக்கம் | விக்னேஸ்வரா கோயில், சித்தூர் அருகில் |
6 | விநாயகபுரம் | நவகிரகங்களுக்கான தனிக்கோயில் பொன்னை அருகில் |
7 | இரத்தினகிரி | முருகன் கோயில் |
8 | கப் அண்டு சாசர் நீர்வீழ்ச்சி | அழகிய நீர்வீழ்ச்சி சத்துவாச்சேரி அருகில் |
9 | அரக்கோணம் | இந்திய இராணுவம் விமானம் மற்றும் கப்பல் படைக்கான பயிற்சி தளம் |
10 | வள்ளிமலை | முருகன் கோயில் பொன்னை அருகில் |
11 | திருவலம் | சிவலாயம் |
12 | பாலமதி மலை | பசுமை புல்வெளிகள் |
13 | படவேடு | ரேணுகாம்பாள் கோயில் |
14 | வேட்டுவனம் | எல்லையம்மன் கோயில் |
15 | மோர்த்தனா அணை | பாலாற்றின் குறுக்கே |
16 | சாத்தனூர் அணை | முதலை பண்ணை |
17 | ஜவ்வாது மலை | கோடைகால சுற்றுலாதளம் |
18 | வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வர்ர் கோயில் | ஆற்காடு நவாப்பினால் கட்டப்பட்டது |
19 | பொற்கோவில் | வேலூரிலிருந்து 5 கி.மீ |
20 | பெருமாள் கோயில் | காவேரிப்பாக்கம் அருகில், |
21 | சிங்காரி கோயில் லெட்சுமி நரசிம்மன் கோயில் | கன்னியம்பாடி |
22 | அமிர்தி காடு, நீர்வீழ்ச்சி | கன்னியம்பாடி அருகில் |
23 | ஏலகிரி மலை | ஜோலார்பேட்டை அருகில் |
24 | திருவந்திரி கோயில் | வாலாஜாப்பேட்டை |
25 | மேல்பாடி சிவன் கோயில் | வள்ளிமலை அருகில் |