திடக்கழிவு மேலாண்மை
இராசஜபாளையம் நகராட்சி 09 சுகாதாரப் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பிரிவும் ஒரு சுகாதார ஆய்வாளரால் நிர்வகிக்கப்படுகிறது. துப்புரவு, வடிகால் சுத்தம் செய்தல் பணிகளில் சுகாதாரத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளை வீட்டுக்கு வீடு தரம் பிரித்து பெறுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கையாளுதல் இவர்களின் முக்கியமான பணியாகும். சராசரியாக தினசரி 55 எம்.டி. குப்பைகள் நகரம் முழுவதும் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது . இந்த நகராட்சியில் 20.37 ஏக்கர் பரப்பளவில் அராசியார் பட்டி கிராம நகராட்சி உரக்கிடங்கு உள்ளது. திடக்கழிவு கலவை மற்றும் சேகரிப்பு திறன் பற்றிய விவரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
கழிவு கலவை விவரங்கள்
திடக்கழிவை கையாளுதல் முறை நகரில் சேகாரமாகும் திடக்கழிவுகளை கொட்டுவதற்கு ஒரு உரக்கிடங்கு உள்ளது மற்றும் 20.37 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அரேசியர் பட்டி நகராட்சி உரக்கிடங்கில் கழிவுகள் சேமிக்கப்டுகிறது. மொத்தமாக 3 டம்பர் பிளேஸர், 2 டிப்பர் லாரிகள் மற்றும் 2 டிராக்டர்கள் கழிவு சேகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள உரக்கிடங்கில் சாலை, எடை பாலம், கழிவுகளை பிரிக்கும் தளம், எஸ்.டபிள்யூ.எம் சிறப்பு திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரிக்கும் இயந்திரம் போன்ற போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குப்பைகளை பிரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு வீடுகளுக்கும் ஹேண்ட்பில்ஸ் விநியோகிக்கப்பட்டு, பூஜ்ஜிய குப்பை முறை குறித்த பிரச்சாரங்களும் சுகாதார பிரிவு மூலம் செய்யப்பட்டுள்ளன உரம் உற்பத்தி இராஜபாடிளயம் நகராட்சி உணவகம் மற்றும் ஹோட்டல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட /பிரிக்கப்பட்ட கழிவுகளைப் பயன்படுத்தி ஒரு உயிர் உரத்தை தயாரித்துள்ளது. பயோ-எரு தயாரிக்க தினமும் 1 மெட்ரிக் டன் குப்பை உரக்கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. |
||||||||||||||||||||||||||||||||||||||