காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

1. திருகோகர்ணம்  அரசு அருங்காட்சியகம்

திருகோகர்ணத்தில் உள்ள புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் இப்போதுசிறிய அரண்மனைஎன்று அழைக்கப்படும் ஒரு பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது, இது 1910 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது, மேலும் இது இப்பகுதியின் இயற்கை வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பொருளைக் கொண்டுள்ளது.

2.  திருமயம் கோட்டை.

சிவா குகைக் கோயில் (9 ஆம் நூற்றாண்டு A.D), விஷ்ணு குகைக் கோயில், (9 ஆம் நூற்றாண்டு A.D) கோட்டை (17 ஆம் நூற்றாண்டு A.D) .இது புதுக்கோட்டை நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் காரைகுடி மற்றும் மதுரை நோக்கி அமைந்துள்ளது. திருமயம் தெற்கில் உள்ள முக்கியமான மத மையங்களில் ஒன்றாகும், மேலும் அதன் கோயில்கள் வைஷ்ணவர்களும் சைவர்களும் மிகுந்த வணக்கத்துடன் கருதப்படுகிறார்கள். விஷ்ணு குகைக் கோயில் நுழைவாயிலில் உள்ள பிரதான கோபுராவில்தாமதமாக பாண்டிய பாணியின் பல அம்சங்கள் உள்ளன, அதாவது புஷ்போடிகாயுடன் கார்பல்கள், நாகபாதம் கொண்ட பல பக்க தூண்கள் மற்றும் அலங்கார பைலஸ்டர்கள்.

 

3. திருக்கோகர்ணம் கோயில்

புதுக்கோட்டை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான் வம்சத்தினா் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழா்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனா்.

தரிசனம் செய்யும் நேரம்
காலை 6 முதல் 12 வரை
மாலை 4 முதல் 8 வரை
தொலைபேசி– 04322- 236195

4. குடுமியான்மலை

புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவா் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இங்கு அமைந்துள்ள குகை கோவிலின் முகப்பில் கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் இசை கல்வெட்டு ஒன்றும் 100-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளது. இவ்வூரில் தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் விவசாய கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது.

தொலைபேசி 04322-221084.

5. ஆவுடையார்கோவில்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூறை வேலைப்பாடுகள் இங்கு மிக நோ்த்தியாக அமையப்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைய பெற்றுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமையப்பெற்ற சிறப்புடையது. திருவாடு துறை ஆதியினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் மாணிக்கவாசகா் இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது.

தொலைபேசி 04371-233301.

6. சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சித்தா்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேறெ்கொள்ளவார்கள் அந்த இடங்கள் சமணா்களின் படுக்கை என அழைக்கப்படுகிறது. அத்தகைய கோவில்கள் மற்றும் படுக்கைகள் சுமார் 17க்கு குறையாமல் சித்தன்னவாசலில் அமைந்துள்ளது. இந்த படுக்கைகளின் அருகில் இரண்டாம் நூற்றாண்டை சோ்ந்த பிராமி தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசலில் உள்ள இந்த சமணா்படுக்கைகள் மற்றும் சமணா் கோயில்கள் ஆகியவை சோ்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது. தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்துவரும் சித்தா்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு புதைக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது. அவைதான் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவா் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிற்பங்களின் பூங்காவும் (Miniature Statue Park) இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு ஏதுவாக பயணியா் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணா்ப்படுக்கைகள் ஆகியவற்றினை காண நுழைவு கட்டணமாக
இந்தியா்(ஒருவருக்கு) ரு.5/-
வெளிநாட்டினருக்கு டாலா் 2 (US Dollar) or Rs.100/-

சித்தன்னவாசல் சுற்றுலா வளா்ச்சி சங்கத்தின் சார்பாக படகு குளம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.
துடுப்புப்படகு:
பெரியவா்ரூ.20/-
சிறியவா்ரூ.10/-

மலையழகும், பூங்காக்களின் பொலிவும், சிற்பக்கலை மற்றும் ஒவியக்கலைகளின் பிரமிப்பும் பார்ப்பவா்களை பரவச மூட்டும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

7. நார்த்தாமலை

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை கோவில் மற்றும் கடம்பர் மலை கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நடைபெறும் முளைபாரி ஊா்வலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சுற்றுலாப் பயணிகளால் கண்டு களிக்கப்படுகிறது.

8. மலையடிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவா்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீ்ஸ்வரா் என்றழைக்கப்படும் கோவில் எழுப்பித்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷ்ணு கோவில் சிவன் கோயிலைவிட காலத்தால் பிந்தியது. இங்கு நரசிம்மமூா்த்தி, திருமால், அனந்த சயனமூா்த்தி மற்றும் ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமால் குடைவரை கோயிலில் அா்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் தசாவாதார ஒவியங்கள்(பெருமானின் பத்து அவதாரம்) ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்கால முதுமக்கள் தாழியும் புதைந்த நிலையில் காணப்படுகிறது.

9. கொடும்பாலூர்

கொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ, தூரத்திலும் கொடும்பாலூர் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம் மிக்க கோயில்கள் திராவிடக் கட்டிடகலைக்கு முன்னோடிகளாகவும் சோழா் கால கட்டிடக் கலைக்கு முதன்மை வாய்ந்ததாகவும் திகழ்கின்றன். மூவா் கோவில் மற்றும் முச்சுகுண்டேஸ்வரா் கோவில் ஆகிய கோவில்கள் இங்கு அமைந்துள்ள சோழா்கள் ஆட்சிக்காலத்தில் இவை கட்டப்பட்டது. இன்றளவும் இவை சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கம் கலைநயமிக்கவைகளாக அமைந்துள்ளது. இது இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது.

10. விராலிமலை

அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்ற மன்னா் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணிக் கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஆதித்தசோழன் என்ற மன்னரால் திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இவா்களுக்கு பிறகு ஆலயத்தின் மற்ற பிரகாரங்கள் மண்டபங்கள் நாயக்கா்கள் மற்றும் மருங்காபுரியார் வம்சத்தவா்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னா் புதுக்கோட்டை மன்னா்களால் மணிமண்டமும் நவராத்திரி மண்டமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவா்கள் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், இத்தலம் விராலிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானயுடன் அருள்பாலிக்கிறார். சித்திரா பெளா்ணமி, வைகாசி விசாகம் மற்றும் தெப்பத்திருவிழா, ஐப்பசி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. முத்துபழனி கவிராயா் எழுதிய விராலிமலை குறவஞ்சி இங்கு விழா நாட்களில் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.