பெரியகுளம் நகரம் திண்டுக்கல் – கம்பம் நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 86 கி.மீ. மேற்கிலும் திண்டுக்கல்
நகரிலிருந்து 60 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 287.060 மீ. உயரத்திலும் மேற்கு
தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்நகர் வராக நதி ஆற்றின் இரு
கரையோரங்களில் அமைந்துள்ளது. இந்நகரம் இயற்கையாகவே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வடக்கு
தெற்கு பகுதிகள் வராக நதி ஆற்றை நோக்கியும் அமைந்துள்ளது. எனவே மழைக்காலங்களில் இந்நகரில் பெய்யும்
மழைநீர் இயற்கையாகவே வராக நதி ஆற்றில் சேகரிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டில் வராக நதி
ஆற்றின் குறுக்கே சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை
நிரம்பியவுடன் வரும் கூடுதல் நீர் வராக நதி ஆற்றில் திறந்து விடப்படும் வராக நதி ஆற்றில் கூடுதல் நீர் திறந்து
விடும் போது கரையோரங்களில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை
எதிர்கொள்வதற்கு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நகர் 2.11 கி..மீ. நீளத்திற்கு நகராட்சிக்கு சொந்தமான சாலையும் 2.00 கி.மீ. நீளத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்
துறைக்கு சொந்தமான சாலையும் அமைந்துள்ளது. நகரில் உள்ள 1.90கி.மீ. நீள மழைநீர் வடிகால் மூலம்
மழைக்காலங்களில் மழைநீர் கடத்தப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ள நிவாரண
முகாம்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்படுகின்றனர். பெரியகுளம் நகராட்சி திருமண மண்டபம் மற்றும்
நகராட்சி பள்ளிகள் வெள்ள நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன.