ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.52.01 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4.00 கி.மீ. நீளத்திற்கு புதைவடிகால் மெயின் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறு
மற்றும் பெரு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ருஐனுளுளுஆகூ) தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியம் மூலம் ரூ.2660.00 லட்சம் மதிப்பீட்டில் புதைவடிகால் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு
அரசாணை எண்.23 நாள் 27.10.2014ன்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் ஒப்பந்தப்புள்ளி கோரி 30.03.2015ல் வேலை உத்தரவு
வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 14.80 கி.மீ. பகிர்மானக் குழாய், 580 எண்ணிக்கை மேன்ஹோல்கள்,1500
புதைவடிகால் இணைப்பு, 3.10 கி.மீ. பம்ப்பிங் மெயின்கள், ஒரு கழிவுநீரேற்று நிலையம் மற்றும் எண்டப்புளி
பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 5ஆண்டுகள்
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால்
பராமரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. நாளொன்றுக்கு 45.00 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு
சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் புல்பண்ணைக்கு பயன்படுத்தப்படுகிறது.