பட்டுக்கோட்டை நகராட்சி
பட்டுக்கோட்டை நகராட்சி 01.04.1967ல் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டு 01.04.1965 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டு, பின்னர், 07.04.1984 முதல், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
2016ம் ஆண்டு சிறந்த நகராட்சிக்கான முதலாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
காசாங்குளம் தென்கரை
பட்டுக்கோட்டை-614601.
தொலை பேசி எண் : 04373 252097
மின்னஞ்சல் : commr.pattukkottai @tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04373 253758
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : தஞ்சாவூர்
மண்டலம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 27.63 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 73097
ஆண்கள் : 36377
பெண்கள் : 36719
திருநங்கை: 1