
In pattukkottai a B grade Busstand located in center place of the city
From there public can have direct buses to all the Major City of the State
as Chennai, Coimbatore, Madurai, Trichi and Nagapattinam for all major cities.
புதிய பேருந்து நிலையம்
பட்டுக்கோட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73135 ஆகும். தற்போதைய பழைய பேருந்து நிலையம் 27 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய “B” Class பேருந்து நிலையம் ஆகும். பட்டுக்கோட்டை நகரில் தற்போது பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இதனால் அதிகமான பேருந்துகள் நகர்பகுதியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் தற்போதைய பேருந்து நிலையம் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. என்பதாலும்மக்கள் தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டை நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பொருட்டு பட்டுக்கோட்டைக்கு நகராட்சிக்கு சொந்தமான நரியம்பாளையம் பகுதியில் நகரளவு எண்.172/P,176/P,177/B1 P,-ல் 6.50 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட A வகுப்பு பேருந்து நிலையம் அமைக்க அரசாணை (பல்வகை) எண்.173, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்..08.12.2022-ல் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணையிடப்பட்டது. தற்போது அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்தில் கீழ்கண்டவாறு வசதிகள் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது
1 ). பேருந்து நிறுத்துமிடம் – 50 எண்ணிக்கை
2).கடைகள் – 120 எண்ணிக்கை
3). உணவகம் – 2 எண்ணிக்கை
4). கழிப்பிடம் – 4 எண்ணிக்கை
5).இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் – 2 எண்ணிக்கை
6). நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – 1 எண்ணிக்கை
7).பொருள் பாதுகாப்பு அறை – 1 எண்ணிக்கை
8). முன்பதிவு அலுவலகம் – 1 எண்ணிக்கை
9). காத்திருப்பு அறை – 3 எண்ணிக்கை