காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
1. சங்கமேஸ்வரர் கோயில்
“சங்கமேஸ்வரர்” என்று அழைக்கப்படும் இந்து கோயில் பள்ளிபாளையத்தில் இருந்து வட மேற்கு திலையில் பவானி காவிரி ஆற்றங்கரையோரத்தில் சங்கமேஸ்வரர் ஆலையம் அமைந்துள்ளது. பவானி காவிரி ஆற்றில் தினமும் ஆயிரக்கான மக்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு வருகின்றனர்.
2. ஆஞ்சயேர் திருக்கோவில்.
பள்ளிபாளையத்தில் இருந்து மேற்கே 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சயேரை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
3.அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்
பள்ளிபாளையத்தில் இருந்து 20 கி.மீட்டர் தொவில் உள்ள திருச்செங்கோட்டில் மலை உச்சியில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
4. கொல்லி மலை
பள்ளிபாளையத்தில் இருந்து கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள அரப்பலீஸ்வரர் திருக்கோவில் மற்றும் 120 உயரமுள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பொழுதுபோக்கிற்கு பிரபலமானது, நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வரனாகும்.