Sewerage

SEWERAGE EXISTING SITUATION

 பல்லவபுரம் பெரு நகராட்சி பாதாள சாக்கடை திட்டம்

பல்லவபுரம் பெருநகராட்சி 18.01 ச.கி.மீ கொண்டு 42 வார்டுகள் உள்ளடக்கி, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,15,452 ஆகும்.  இந்நகராட்சியில் பாதாள கழிவுநீர் திட்டம் 2012ம் ஆண்டு முதல் மக்கள் பயன¦பாட்டில் 42 வார்டுகளில் 24 வார்டுகளுக்கு முழுமையாகவும், 18 வார்டுகளுக்கு பகுதியாகவும் பாதாள சாக்கடை திட்டம்  அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பாதாள கழிவுநீர் திட்டத்தின் மூலம் 210 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மீதமுள்ள விடுபட்ட பகுதிகளை 42.00 கி.மீ. நீளத்திற¦கு பாதாள கழிவுநீர் திட்டம் அமைக்க 2016-17ம் ஆண்டு ஹஆசுருகூ திட்டத்தின் கீழ் ரூ.24.06 கோடிக்கு அனுமதி பெறப்பட்டு 02.08.2017 அன்று பணிகள் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்புகள் 8867 பாதாள கழிவுநீர் குழாய்  40.17 கீ.மீ நீளத்திற்கும்,212 கீ.மீ நீளத்திற்கு நீரேற்று (Pumping main) குழாய்களும்,1611 எண்ணிக்கை ஆழ்நுழைவு குழிகளும் இவற்றை யாவையும் ஒருங்கிணைத்து பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்ல 8 சாலையோர கழிவுநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டு 31.012.2018 அன்று பணிகள் முடிக்கப்பட்டது.10.01.2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொலி மூலம் திட்டம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பல்லவபுரம் பெருநகராட்சியே ஆகும்.