திடக்கழிவு மேலாண்மை

நாகப்பட்டினம் நகராட்சியில் நாகப்பட்டினம் மற்றும் நாகூர் நகரம் அடங்கும். துப்புரவுப் பணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன நாகூர் ஒரு பிரிவு, மற்ற மூன்று புதிய பேருந்து நிலையம், பெரிய கடைத் தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் (நாகப்பட்டினம் நகரில் நாகப்பட்டினம் தொடர்வண்டி நிலையம் அருகில்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு உருவாக்கப்படும் சராசரி குப்பை 500 கிராம் எனவே, நகராட்சி பகுதியில் ஒரு நாளைக்கு உருவாக்கப்படும் கழிவுகளின் அளவு 55 மெட்ரிக்டன்

மனித சக்தி : 

சுகாதாரப் பிரிவுகள் 4
சுகாதார ஆய்வாளர்கள் 4
சுகாதார மேற்பார்வையாளர்கள் 14
தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் 96 + அவுட்சோர்சிங் 145

பயன்படுத்தப்படும் வாகனங்கள்  :

சல்லேஜ் வாகனம் அசோக் லேலண்ட் 1 எண்ணிக்கை.
டிப்பர் லாரி 4 எண்ணிக்கை
காம்பாக்டர்  லாரி 2 எண்ணிக்கை
எல் சி வி 8 எண்ணிக்கை
பாட்டரியல் இயங்கும் வாகனங்கள் 14 எண்ணிக்கை

 

உரக் கிடங்கு 2 எண்ணிக்கை (10.00 ஏக்கர்)
வீடு வீடாக குப்பை சேகரிப்பு வார்டுகள் 1 முதல் 36 வார்டுகள்
 குப்பைகளின் அளவு 32 மெ.டன் (ஒரு நாளுக்கு)
காம்பாக்டர் பின் 120 எண்ணிக்கை

ஊக்குவித்தல், தகவல் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள்:

குப்பை சேகரிப்பு – மக்கும் குப்பைகள் – 65% மற்றும் மக்காத குப்பைகள் கண்ணாடி, ரேஜ்கள் – 15% மற்றும் நெகிஷி – 10%.

விழிப்புணர்வு :

துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் விளம்பரம் மூலம் பிரச்சாரம். சுய உதவி குழுக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தனிப்பட்ட தகவல் தொடர்புகள். மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கன்சர்வேன்சி வாகனத்தின் ஓவியம். குப்பைகளைத் தூக்கப் பயன்படும் கன்சர்வேன்சி வாகனங்களின் , மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்துக்காட்ட பச்சை நிற மற்றும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.

வீடு வீடாக குப்பை சேகரிப்பு வார்டுகள் :

அனைத்து வார்டுகள் 1 முதல் 36 வரை வீடு வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்து சேகரிக்கப்படுகிறது.

அடையாள அட்டைகள்:

அனைத்து பொது சுகாதார ஊழியர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.