மணப்பாறை நகராட்சி
மணப்பாறை நகராட்சி 01.10.1966-ம் தேதியிலிருந்து 30.09.1966-ஆம் தேதிய ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.2318-ன்படி 3-ஆம் நிலை நகராட்சியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நகராட்சி எல்லையில் கண்ணுடையான்பட்டி. கலிங்கப்பட்டி. உசிலம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களும் அதனுள் அடங்கிய குக்கிராமங்களும் இருந்தன (செவலுர் தாய் கிராமம் தவிர) கண்ணுடையான்பட்டி. கலிங்கப்பட்டி உசிலம்பட்டி ஆகியவைகளும் 09.04.1974-ஆம் எண்கொண்ட அரசாணையின்படி பிரிக்கப்படடு பஞ்சாயத்துக்களுடன் இணைக்கப்பட்டது. மணப்பாறை நகர் பஞ்சாயத்து பகுதி மட்டும் தற்போதைய நகராட்சியாக இருந்து வருகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் 28.06.1978ஆம் தேதிய அரசாணை எண்.1087-ன்படி 01.07.1978ஆம் தேதியிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை (நிலை) எண்.85 நாள்.22.05.1998-ன் படி மண்பாறை நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நகராட்சி 01.11.1967-ம் தேதிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உத்தரவு எண்.2126-ன் படி 18 தொகுதிகளாக பிக்கப்படிருந்தது. அதற்குபின் இந்நகராட்சி 04.07.1974-ஆம் தேதிய உள்ளாட்சி உத்தரவு எண்.1602-ன்படி 20 தொகுதிகளாக பிக்கப்பட்டது. அரசு ஆணை எண்.135 மற்றும் 136-ன்படி நகராட்சி பகுதி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. மணப்பாறை நகராட்சி பரப்பளவு 20.85 சதுரகிலோ மீட்டர். மக்கள் தொகை 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 35770, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 40510.
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04332-260242
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
தினசரி அறிக்கை-கட்டுப்பாட்டு மண்டலம் இல்லை – COVID 19
தொடர்பு முகவரி
திரு. பி வி சுரேந்திர ஷா
நகராட்சி ஆணையாளர்(கூ பொ)
நகராட்சி அலுவலகம்
மதுரை ரோடு
மணப்பாறை-621 306
தொலை பேசி :04332-260242
இ-மெயில் : commr.manapparai[at]tn[dot]gov[dot]in
ePay
புதிய வலைத்தளம் https://tnurbanepay.tn.gov.in ஆன்-லைன் வாயிலாக சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கழிவுநீர் வரி மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதிகளை வழங்குவதன் மூலமும், பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதன் மூலமும், புதியதாக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெற, புதிய வரிவிதிப்பு பெற, புதிய குடிநீர் இணைப்பு பெற, புதிய தொழில் வரி பெற, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான லைசன்ஸ் பெற சென்னை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
பொது
- மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
- மண்டலம் : தஞ்சாவூர்
- மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு : 20.85 ச.கிமீ
மக்கள் தொகை
- மொத்தம் : 40510
- ஆண் : 20139
- பெண் : 20371
விரைவான இணைப்பு
Read More…