சந்தைகள்

கால்நடை சந்தை

மணப்பாறை நகரம் கால்நடை சந்தைக்கு பிரபலமானது. சந்தையின் பரப்பளவு 12.52 ஏக்கர். இது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. “மணப்பாறை மாடு கட்டி” என்ற திரைப்பட பாடலால் இதன் முக்கியத்துவம் மக்களுக்கு நன்கு தெரியும். இது தமிழ்நாட்டில் மூன்றாவது தரவரிசை சந்தையாகும். இது பிரதி வாரம் புதன் கிழமை நடை பெறும்.

காய்கறி சந்தை

வாரசந்தை (புதன்கிழமை) மற்றும் தினசரி காய்கறி சந்தை நகரத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து வகையான காய்கறிகளும் சந்தையில் கிடைக்கின்றன