குடிநீர் விநியோகம்

குடிநீர் விநியோகம்

மணப்பாறை நகரின் நீர்வழங்கும் முக்கிய ஆதாரமாக மணத்தட்டை, குளித்தலை பகுதியில் உள்ள வற்றாத காவிரி நதி உள்ளது.

மணப்பாறை மற்றும் 50 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் தழிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தழிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2.20 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்படுகிறது. மேற்படி குடிநீர் 27.00 இலட்சம் கொள்ளளவு கொண்ட 8 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிற உபயோகத்திற்காக பயன்படுத்கப்படும் தண்ணீர் நகரில் 187 இடங்களில் சிறு மின்விசை பம்புகள் மூலம் எச்.டி.பி.இ டேங்க் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  • நாள் ஒன்றுக்கு 3.05 எம்.எல்.டி குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு 76 எல்.பி.சி.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • மொத்தம் உள்ள 13012 வரிவிதிப்புகளின் 5821 வரிவிதிப்புகளுக்கு குடிநீர்குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் உள்ள 98.40 கி.மீ சாலைகளில் 84.368 கி.மீ அளவிற்கு பகிர்மான குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
  • நகராட்சிக்குச் சொந்தமான 8 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளின் கொள்ளளவு 27.70 இலட்சம் லிட்டர்.
  • நகரில் ஏற்பட்ட வறட்சி நிலை சமாளிக்க குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
  • நகர மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்தோடு மாதம் தோறும் குடிநீர் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரமான குடிநீர் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு 02 மி.கி/லிட்டர்
  • நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் உள்ள கலங்கல் நிலை 06 (Average Turbidity Level of Water 0.06 NTU/JTU)