எங்களை பற்றி

 

மணப்பாறை நகராட்சி

மணப்பாறை நகரம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திருச்சராப்பள்ளியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மணப்பாறை நகரத்தின் அமைவிடம் 10°36′N 78°25′E ஆகும். மணப்பாறை நகராட்சி பரப்பளவு 20.85 சதுரகிலோ மீட்டர்.

ஆண்டு மொத்த மக்கள் தொகை ஆண்கள் பெண்கள்
1951 8770 4495 4275
1961 11644 6038 5606
1971 19895 10333 9562
1981 27242 13946 13296
1991 31837 16233 15604
2001 35770 17786 17984
2011 40510 20139 20371
  • திருச்சிராப்பள்ளியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசாங்கம் நீண்ட பட்டியல் கொண்ட பணிகளை நகராட்சி சட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. இந்த பணிகள் பொது சுகாதாரம், நலன், முறைப்படுத்தும் பணிகள், பொது மக்களின் பாதுகாப்பு, பொது உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை சார்ந்ததாகும்.
  • குடிநீர் வழங்குதல், கழிவுநீர் மற்றும் சுகாதாரம், தொற்று நோய்கள் அகற்றம் போன்றவை பொது சுகாதார பணிகளில் அடங்கியுள்ளது.
  • இந்தியாவில், அதிக நகர்புறமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழுகிறது. இம்மாநிலத்தின் 48.5% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் (யுஎல்பி) தங்களது நகர்ப்புறங்களில் திட கழிவு மேலாண்மை பணிக்கு பொறுப்பாவர். விரைவாக நடந்து கொண்டிருக்கும் நகரமயமாக்குதல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை போன்ற நகர்புற உள்கட்டமைப்புகளை மிகவும் சிரமத்தில் ஆழ்த்துகிறது.
  • கல்வி, கேளிக்கை போன்ற பொது வசதிகள் நலனில் அடங்கியுள்ளன.
  • கட்டிட விதிமுறைகளை பரிந்துரைத்து செயல்படுத்துதல், பொது நிலங்களில் அத்துமீறலை கண்காணித்தல், பிறப்பு பதிவு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்றவை முறைபடுத்தும் ஒழுங்குமுறை பணிகளை சார்ந்தவையாகும்.
  • நெருப்பிலிருந்து பாதுகாப்பு, தெரு விளக்கு மற்றும் பொது பணிகளான நகரின் உள் வீதிகள் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை பொது மக்கள் பாதுகாப்பை சேர்ந்தது; நகர திட்டமிடல் மற்றும் வணிக சந்தைகள் வளர்ச்சி பணிகளில் அடங்கியது.
  • நகராட்சிகளின் பொதுவான பாரம்பரிய பணிகளை தவிர, பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டமிடல் மற்றும் சமூக நீதி, நகர்புற ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், கலாச்சார, கல்வி, நாகரீக அம்சங்கள் வளர்ப்பு போன்ற பல வளர்ச்சி பணிகளையும் நகராட்சிகள் செய்கிறது.
  • பெரும்பாலான நேரங்களில் குப்பைகூளங்கள் சேகரிப்பு, குப்பைகூளங்கள் அகற்றம், தெரு விளக்குகள் , சாலை உருவாக்கம் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை நகராட்சி அமைப்புகள் செய்கின்றன.