1967-ம் ஆண்டில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் துவக்கப்பட்டது. நகரின் மொத்த பரப்பளவு 12.58 கி.மீ-ல், நகர் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிளாக் எண்.5-ல் முதலாவது திட்டம் வார்டு எண்.7,8,9,10 மற்றும் 11ன் ஒரு பகுதி ஆகியவற்றில் 1.94 ச.கிமி அளவில், 680 பாதாள சாக்கடைத் திட்ட ஆளிரங்கு கிணறுகள் மற்றும் பாணாதுறை கழிவு நீருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு நகரின் முதலாவது பாதாள சாக்கடைத் திட்டம் 1967-ல் செயல்பாட்டிற்கு வந்தது.
தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இரண்டாவது பாதாள சாக்கடைத் திட்டம் அரசாணை எண்.726, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 31.12.2000-ன்படி ரூ.46.00 கோடியில் அனுமதிக்கப்பட்டு,. திருத்திய மதிப்பீடு ரூ.50.60 கோடிக்கு தேசிய நதி நீர் பாதுகாப்பு துறையின் கடிதம் 139020/9/2000/NRCD-II நாள் 12.02.2001-ன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் பழைய பாதாள சாக்கடைத் திட்ட அமைப்புகள் புனரமைப்பு செய்யப்பட்டதுடன், 125.70 கி-மி. கழிவு நீ சேகரிப்பு குழாயும், 25 கி.மீ. பம்பிங் மெயின் மற்றும் 5539 ஆளிரங்கு கிணறுகள் அமைக்கப்பட்டதுடன், தேப்பெருமாநல்லூரில் 17 MLD திறனுள்ள ASP TECHNOLOGY கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் இது வரையில் 19578 வீட்டிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்றாவது திட்டமாக நகரில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்ட அமைப்புகள் ஏற்படுத்தும் திட்டம் ரூ.59.84 கோடி மதிப்பீட்டில் அம்ரூட் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதில், அரசாணை (நிலை) எண்.120, ந.நி.ம.கு.வ. (நநி.3(2)) துறை நாள் 9.11.2020–ன்படி ரூ.70.60 கோடிக்கு திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 35.777 கி.மீ கழிவு நீர் சேகரிப்பு குழாய்களும், ஆளிரங்கு கிணறுகள் 1457 எண்ணிக்கையும், பம்பிங் மெயின் 4.18 கி.மீ, லிப்டிங் ஸ்டேஷன்கள் 7 எண்ணிக்கை, பாதாள சாக்கடை வீட்டிணைப்புகள் 4946 எண்ணிக்கை அமைக்கப்பட்டுள்ளதுடன், கழிவு நீர் சுத்திகப்பு நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நகரில் உற்பத்தியாகும் கழிவு நீரில் 13 மில்லியன் லிட்டர் கழிவு நீர் தினமும் சுத்திகரிக்கப்படுகின்றது.
மொத்த குடியிருப்புகள் எண்ணிக்கை | 36105 |
பொது கழிவறைகள் | 68 Nos.- Disposal in UGSS |
சமுதய கழிவறை | 7 Nos. Disposal in UGSS |
கழிவுநீர் சேகரிப்பு குழாய் அமைப்புகள் | 146.09 KM |
பம்பிங் ஸ்டேஷன் | 10 (7 Nos. of P S , 3 nos. of L S) |
தொழில்நுட்பம் | ASP Technology 17 MLD Capacity |
பாதாள சாக்கடைத் திட்ட வீட்டிணைப்புகள் பெற்ற குடியிருப்புகள் | Existing – 19823
Amrut – 4946 |
Total – 24769 |