Market

 

                   கோவில்பட்டி நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புநிலை நகராட்சி ஆகும்.  இதன் மொத்த பரப்பளவு 6.48 ச.கிமீ ஆகும்.  இந்நகராட்சியின் மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது 100998 ஆகும்.  மேலும், இந்நகராட்சி 36 வார்டுகள் உள்ளடங்கியது.

                     கோவில்பட்டி நகராட்சி  மார்கெட் சாலையில் உள்ள தினசரி சந்தை 3.25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு  பழுதடைந்த நிலையில் இருந்ததை, மொத்த  சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இடித்து அப்புறப்படுத்திவிட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதியதாக தினசரி சந்தை கட்டமைப்பின் அவசியத்தையும்,  இந்நகராட்சியின் பிரதான வருவாய் நலன் கருதியும், மேற்படி புதிய தினசரி சந்தை கட்டுமானம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசைணை (4D) எண்.23, நாள்: 01.12.2022-ன் படி அமைக்கப்பட்டுள்ளது.

 

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்- 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.687/-இலட்சம் மதிப்பீட்டில்.

2903 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள   A-பிளாக்கில்  92 கடைகள்

1104 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள    B- பிளாக்கில்  62 கடைகள்

                                                                                      மொத்தம்   = 154 கடைகள்

புதிய தினசரி சந்தையில் 154 கடைகள் அனைத்து வசதிகளுடன் தற்பொழுது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

புதிய தினசரி சந்தை உள்கட்டமைப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

  • சாலை வசதிகள்
  • மின் விளக்கு வசதி
  • குடிநீர் வசதி
  • கழிப்பிட வசதி
  • பாதுகாப்பு மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்குமான வசதி
  • வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி
  • சுற்றுச்சுவர் வசதி
  • ஓட்டுநர்கள் ஓய்வறை வசதி
  • கேன்டீன் வசதி
  • இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் வசதி
  • அனைத்து கடைகளுக்கும் தனித்தனியாக மின் இனைப்பு வசதி.