கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான அண்ணாசாலை நகரளவு எண்.40 ல் அமைந்துள்ள தினசரி மார்க்கெட் ஆனது நகரின் முக்கிய வணிக பகுதியாகும். இந்த மார்க்கெட் ஆனது நகரில் வசிக்கும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்த மார்க்கெட் பகதியில் காய்கறிகடைகள். பழக்கடைகள் மற்றும் மட்டன் ஸ்டால் அமைந்துள்ளது.இந்த தினசரி மார்க்கெட் மூலம் நகராட்சிக்கு வருவாய் ஆண்டுக்கு …………………… ஈட்டுகிறது.
தற்போது இந்த தினசரி மார்க்கெட் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.356.00 இலட்சத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 30.03.2022ல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.