கோவிட்-19 நோய் தடுப்பு மேலாண்மை

 

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

கீழக்கரை நகராட்சி கீழ்க்காணும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

 • கீழக்கரை நகராட்சி மக்களிடையே போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை பேனர்கள், பதாகைகள் மற்றும் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் போன்ற ஏனைய தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக எடுத்து வருகிறது.
 • அனைத்து வார்டுகள் மற்றும் தெருக்களில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 • ஆய்வு கூட்டங்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்துப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 • உதவி கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு 24×7 மக்கள் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • கிருமி நாசினி கைத்தெளிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்கள், கட்டிடங்கள், பொது வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • பொதுமக்கள் கூடும் சந்தைகள், கடைவீதிகள் மற்றும் மருந்தகங்களில் சமூக விலகல் கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 • அம்மா உணவகம் மூலம் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடைபிடிக்க வேண்டியவை

 1. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
 2. முகக்கவசம் அணியும் முன்னர் கைகளை சோப் அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
 3. கைகளை அடிக்கடி சோப் அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
 4. இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை துணியால் மூட வேண்டும். இயலாத போது கைகளால் முகத்தை மறைக்காமல், முழுங்கையால் முகத்தை மறைப்பது மிகச் சிறந்த வழி. மேலும், தவறி கைகளில் முகத்தை மறைத்தால் உடனே சோப் அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
 5. கூடுமானவரை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
 6. தும்மும் போதும் இருமும் போதும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
 7. வீட்டில் கொரோன பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யும் போது கையுறை மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் .
 8. கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்கவும்.
 9. கொரோன பாதித்தவர்களுடன் தொடர்பில் இருக்க நேர்ந்தால் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்காவண்ணம், குறைந்தது 14 நாட்கள் தங்களை தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
 10. நல்ல சூடான உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

 1. துணியை இலகுவான முறையில் முகக்கவசத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். துணியை நல்ல இறுக்கமாக வாய் மற்றும் மூக்கை மூடும் வண்ணம் பயன்படுத்தவும்.
 2. தங்களது முகத்தை குறிப்பாக கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை தொடாதீர்கள். அவ்வாறு தவறி தொட்டால் உடனே சோப் அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
 3. தங்களது வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுவதை தவிர்க்கவும்.
 4. சமூக விலகலுக்கான நாட்களை ஏதோ விடுமுறை நாட்கள் போல் கழிக்க வேண்டாம்.
 5. உணவு பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும்.
 6. மற்றவர்களுடன் கைக்குலுக்குவதையும் கட்டி பிடிப்பதையும் தவிர்க்கவும். 6 அடி இளைவெளி விட்டு இருக்கவும். .
 7. தங்களுடைய வயதான உறவினர்களையோ, சமூக உறுப்பினர்களையோ சந்திப்பதை தவிர்க்கவும்.
 8. பொது இடங்களுக்கு, குறிப்பாக உடற்பயிற்சி கூடம், தியேட்டர்கள், பூங்காக்கள், உணவங்கள், முடிதிருத்தம் செய்யும் சலூன்கள், அழகுநிலையங்கள் செல்வதை தவிர்க்கவும்.
 9. குளிச்சியான பானங்களை உணவுகளை தவிருங்கள்.
 10. தேவையற்ற அச்சத்தினை தவிர்க்கவும்.