காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

1. ஏர்வாடி தர்கா

ஏர்வாடி தர்கா முஸ்லிம் மக்களின் மிக முக்கியமான மசூதிகளில் ஒன்று. இங்கு தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கொண்டாடப்படும் சந்தன காப்பு விழா மிகவும் விசேசமானதாகும். இந்த விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.

2. இராமநாதசுவாமி திருக்கோவில் (இராமேஸ்வரம்)

இராமநாதசுவாமி திருக்கோவில் இந்து மக்களின் மிக முக்கியமான புண்ணிய தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் புனித யாத்திரையாக வருகின்றனர்.