நகராட்சி ஆணையாளருக்கு உதவியாக துப்புரவு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் தலைமையில் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவுகள், தடுப்பூசிகள், மலேரியா டெங்கு நோய்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகளை பொது சுகாதாரதுறை மேற்கொள்கிறது.
மேலும், இத்துறை நகரில் திடக்கழிவு மேலாண்மை, இறந்த விலங்குகளை அகற்றுதல், தெருவிலங்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் களைதல், கால்வாய் சுத்தம் செய்தல், கொசுமருந்து தெளித்தல், புகை அடித்தல் ஆகிய பணிகளுடன் தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
பரப்பளவு : 12.50 ச.மீ
மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) : 40542
ஒவ்வொரு மாதமும் நகருக்கு வருகை தரும் மக்கள் தொகை : –
வார்டுகளின் எண்ணிக்கை : 18
தெருக்களின் எண்ணிக்கை : 78
நகராட்சி சாலை நீள அளவு : 20.683 கி.மீ
நகராட்சியில் உள்ள நெடுஞ்சாலை நீள அளவு : 4.475. கி.மீ
மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை : 14247
தினசரி சேகரமாகும் கழிவுகள் விவரங்கள்
நாள்தோறும் சேகரமாகும் கழிவுகள் : 8 மெ.டன்
நகராட்சியால் அகற்றப்படும் கழிவுகள் : 8 மெ.டன்