காஞ்சிபுரத்தின் காண வேண்டிய இடங்கள்
கைலாசநாதர் கோயில்
சிறப்பு மிக்க புகழ் வாய்ந்த கைலாசநாதர் கோயில் காஞ்சிமாநகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள லிங்கம் 10 அடி உயரம் கொண்டு சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மவர்மன் அவர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும்.
ஏகாம்பரநாதர் கோயில்
இக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கோபுரம் 57 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலின் இராஜகோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரம் ஆகும். இக்கோயில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஆயரம் கால் மண்டபம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்
காமாட்சி அம்மன் ஆலயம்
இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு காஞ்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. “க” என்பது கல்விக் கடவுள் சரஸ்வதி என்றும், “மா” என்பது செல்வத்தின் கடவுள் சரஸ்வதி தேவியாகவும் கருதப்படுகிறது
காஞ்சி மடம்
மிகவும் புகழ் வாய்ந்தி காஞ்சி காமகோடி பீடம் சங்கரமடம் ஆகும். இம்மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு மூலமான்ய சர்வாஜன பீடம் என அழைக்கப்படுகிறது. இம்மடத்தின் 68-வது மடாதிபதியாக காஞ்சி மஹாசுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார். இத்திருச்சபை 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இம்மடத்தின் 69 மற்றும் 70 வது மடாதிபதிகளாக முறையே ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கர விஜயேந்திர ஸ்வாமிகள் உள்ளனர்.
ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீ வரதராஜர் கோயில் என பிரபலமாக அறியப்படும் ஸ்ரீதேவராஜ ஸ்வாமி திருக்கோயில் காஞ்சிமாநகரின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம் 23 ஏக்கர் நிலப்பரப்பும் 19 கோபுரங்களும் 400 தூண் மண்டபங்களும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். 12 ஆழ்வார்கள் இக்கோயிலில் விஜயம் செய்து இறைவனின் புகழ் பாடியதாக கூறப்படுகிறது