கழிவுநீர்

காஞ்சிபுரம் பெரு நகராட்சி
பாதாள சாக்கடை திட்டம்

 நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ஆயுள் காப்பீட்டு கழக கடன் மூலமாக 134.00 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டமானது 1972-ம் ஆண்டு துவக்கப்பட்டு 1978 மற்றும் 1980-ம் ஆண்டில் பணி முடிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 78 கி.மீ நீளத்திற்கு கழிவு நீர் குழாய் பாதையும், 6 கி.மீ. நீளத்திற்கு கழிவு நீர் உந்து குழாய் பாதையும் அமைக்கப்பட்டது. இரண்டு நீரேற்று நிலையங்கள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 86 ஏக்கர் நில பரப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தி புல் பண்ணை அமைக்க திட்டத்தில்வழிவகை செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டது.

நடைமுறையில் இருந்து வந்த பாதாள சாக்கடை அமைப்பானது தற்போதுள்ள மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் அதனை புனரமைப்பு செய்திடவும் மேலும் நகரின் முழுமையான பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு புதை வடிகால் விரிவாக்கம் மற்றும் புனரமைப்பு திட்டம் இந்நகராட்சியில் 2004-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு ஆணை 3 (டி) எண்.31, நாள் 18.8.2004-ன்படி ரூ.12.59 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதியம் ஐஐஐ திட்டத்தில் நிறைவேற்ற நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. பணியினை மெஸர்ஸ சேகர் தீபக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிட், சென்னை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பணி நிறைவேற்றப்பட்டது. பணி நிறைவேற்றும்போது நீரேற்று நிலைய இடம் குறித்த வழக்கு காரணமாக திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஒப்பந்த விதிகளின்படி திட்டப்பணி முடியும் காலத்திற்கு முன்பாகவே திட்டம் முடிக்கப்படவில்லை. பின்னர் இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டி அவசியத்தை கருத்தில் கொண்டு 2009-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு ஆணை 3(டி) எண்.18, நாள் 30.12.2009-ல் திருத்திய மதிப்பீடு ரு.17.06 கோடிக்கு மீதம் உள்ள திட்ட பணிக்கு திருத்திய நிர்வாக அனுமதி வழங்கியதின்பேரில் பணியினை மெஸர்ஸ் பாலாஜி இன்டஸ் டிரியல்ஸ் & அக்ரிகல் சரல் கேஸ் டிங்ஸ் , செகந்திராபாத் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கீழ்காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வ.எண். பணிகள் விவரம் நிறைவேற்றப்பட்ட அளவு
கழிவுநீர் சேகரிப்பு பணிகள்
1 கழிவுநீர் குழாய் வடிகால 33.098 கி.மீ.
2 ஆள் இறங்கு தொட்டிகள் 1371 எண்கள்
3 வீட்டு குழாய் இணைப்புகள் 3644
கழிவு நீர் உந்து பணிகள்
4 கழிவுநீரேற்று நிலையம் 3 எண்கள்
5 கழிவுநீர் உந்து நிலையம் 2எண்கள்
6 ஏற்கனவே உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு நீர் மூழ்க்கி பம்புகள் அமைத்தல் 2 எண்கள்
7 கழிவுநீர் உந்து குழாய்கள் 8.166 கி.மீ.
கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு பணிகள
8 கழிவுநீர் சுத்திகரிப்பு குட்டைகள் அமைக்கும் பணி. 14.71 மில் லியன் லிட்டர் கொள்ளளவு திறன்

தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 27.256 ஏக்கரில் நகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளளவான 112 ஏக்கரில் 26 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகும். மேலும் 39.40 ஏக்கர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும் மீதமுள்ள 72.60 ஏக்கர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் மற்றும் புல் பண்ணை வளர்ப்பதற்கும் பயன்பாட்டில் உள்ளது. நகராட்சியானது கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இத்திட்டப்பணி 45 வார்டுகளில் உள்ள விரிவாக்கம் பகுதி மற்றும் 1978-ம் ஆண்டு திட்டத்தில் விடுப்பட்ட 115 தெருக்களிள்ல பணிகள் ளசெய்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 16105 எண்ணிக்கை வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திட்டம் நிறுவுதலுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் 24.08.2012.
திட்ட இயக்கத்திற்கான விண்ணப்பம் மீள சமர்ப்பிக்கப்பட்ட நாள் 19.06.2013, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மண்டல குழு 25.10.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி அனுமதி வழங்குவதற்காக மாசு கட்டுப்பாடு வாரியம், தலைமை அருலுவலகத்திற்கு மேல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

திட்டப் பணி நிறைவேற்ற கீழ்காணும் நிதி ஆதார அடிப்படையில் மதிப்பீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

1 அரசு மான்யம் .. ரூ.4.98 கோடி
2 தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் கடன் ரூ.5.84 கோடி
3 பயனாளிகள் பங்களிப்பு மற்றும் நகராட்சி பங்களிப்பு ரூ.6.24 கோடி

மேற்படி திட்டபணியானது 14.30 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்படும். மேலும் திட்டப்பணியில் இதுவரை 10.35 கோடி செலவினம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டப்பணி 45 வார்டுகளில் உள்ள விரிவாக்கப் பகுதி மற்றும் 1978-ம் ஆண்டு திட்டத்தில் விடுப்பட்ட 115 தெருக்களில் பணிகள் செய்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.