காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

1. நஞ்சுண்டேஸ்வரர் கோயில்

நஞ்சுண்டேஸ்வரர்” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்து சிவன் கோயில் இடைப்பாடி பஸ்நிலையம் அருகே சிறப்புற அமைந்துள்ளது.  ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை தோரோட்டம் நடைபெறும்.  இடைப்பாடி சுற்றுவட்டார மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

2. பூலாம்பட்டி படகுத்துறை

இடைப்பாடியிலிருந்து 11.7 கி.மீ. தொலைவில் காவேரிக்கரையில் இயற்கை சூழ்ந்த அமைவிடத்தில் பூலாம்பட்டி படகுத்துறை உள்ளது.  இதன் அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.