காண வேண்டிய இடங்கள்
ஓசூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்ப்பதற்கு ஆர்வமான இடங்கள்
| இடத்தின் பெயர் | பார்க்கவேண்டிய இடங்கள் | தூரம் | வழி |
| சந்திரசூடேஸ்வரர் கோயில் | கோயில் மற்றும் பசுமையான பின்னணி | 1 கி.மீ | ஒசூர் நகரம் |
| பெருமாள் கோயில் | கோயில் | 1 கி.மீ | ஒசூர் நகரம் |
| பிரம்ம மலை கோயில் | கோயில் | 1 கி.மீ | ஒசூர் நகரம் |
| தொரப்பள்ளி | இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி பிறந்த இடம் | 11 கி.மீ | இராயக்கோட்டை நோக்கி செல்லும் வழி |
| மத்திகிரி | கால்நடை பண்ணை | 6 கி.மீ | தேன்கனிக்கோட்டை நோக்கி செல்லும் வழி |
| கெலவரபள்ளி அணை | நீர்த்தேக்கம் மற்றும் பூங்கா | 10 கி.மீ | ஆவலபள்ளி வழியாக |
| உத்தனபள்ளி | முருகன் கோயில் | 17 கி.மீ | இராயக்கோட்டை நோக்கி செல்லும் வழி |
| தளி | ஏரி காட்சி (குட்டி இங்கிலாந்து) | 27 கி.மீ | ஓசூரிலிருந்து தளிக்கு செல்லும் வழி |
| தேன்கனிக்கோட்டை | பெட்டராயசாமி கோயில் | 25 கி.மீ | ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் வழி |
| இராயக்கோட்டை | மலைக்கோட்டை | 30 கி.மீ | ஓசூரிலிருந்து இராயக்கோட்டை செல்லும் வழி |
வரலாற்று தருணங்கள்
ஓசூரானது 1290-ம் ஆண்டு இராமனாத மன்னரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோசியாலா வம்சத்தைச் சார்ந்தவர். ஹோசியாலா வம்சத்தின் ஆட்சியானது மாரவர்மன் சுந்தரபாண்டியனுடனான யுத்தத்தில் 3-ம் பல்லவராயா இறந்தபின் முடிவுக்கு வந்தது.
மலை உச்சியில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலானது, ஹோசியலா வம்ச ஆட்சியில் மன்னர் திருப்புவனமல்ல பர்வதிராஜ அந்தியாழ்வாரால் கி.பி.1260-ம் ஆண்டு கட்டப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம் கலெக்டர்/ஆட்சியர் வல்டோன் இல்லியார்ட் லோக்கர்ட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமயகமாக மாற்றினார். 1980-களில் சிப்காட் உதவியுடன் தொழிற்சாலைகள் மயமாக்கல் தொடங்கியதுடன் ஓசூர் தொழிற்சாலை நகரமானது. அதன்பிறகு அடிப்படை வளர்ச்சிகள் நடைபெறதத்தொடங்கின.