நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த மின் ஆளுமை (Urban Tree Information System).
பார்வை
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த மின் ஆளுமை நிர்வாகத்தின் மூலம் செயல்திறன் மிக்க , துல்லியமான , வெளிப்படை தன்மைகளுடன் கூடிய பொதுமக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினால் வழங்க வேண்டிய சேவைகளை எளிமையகவும், மிக விரைவாகவும் வழங்க முடியும்.
முதல் கட்டம்
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு
- சொத்து வரி
- குடிநீர் விநியோகம்
- தொழில் வரி
- வரியில்லா இனங்கள்
- புதை வடிகால் இணைப்பு
- வர்த்தக உரிமம்
- நிதி கணக்கியல்
- பொதுமக்கள் சேவை மையம்
- குடிமக்கள் இணைய முகப்பு
- குறை தீர்வு
- கணினி நிர்வாகம்
இரண்டாம் கட்டம்
- நகரசபை நிகழ்ச்சி நிரல்
- சட்டசபை கேள்விகள் மற்றும் பதில்கள்
- ஒருங்கிணைந்த பணியாளர் மேலாண்மை அமைப்பு
- சட்ட மேலாண்மை
- சொத்து முன்பதிவு சொத்து மேலாண்மை
- தணிக்கை
- கட்டிட உரிமம்
- பணியாளர் சுய சேவை
- மின்னணு அலுவலகம்
- மருத்துவமனை மேலாண்மை
- கொள்முதல்
- பள்ளி மேலாண்மை
- திடக்கழிவு மேலாண்மை
- வாகன மேலாண்மை
- வார்டு வேலை
பயன்பாட்டு அம்சங்கள்
- ஒற்றை உள்நுழைவு வசதி
- தனிப்பட்ட பயனர் ஐடி
- பயோமெட்ரிக் உள்நுழைவு
- டாஷ்போர்டு
- ஒற்றை சாளர அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது
- 24 × 7 சேவை வசதி
- எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்
- பல விநியோக சேனல்கள்
- பொது சேவை மையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது
பொதுமக்களுக்கான நன்மைகள்
- பொறுப்புணர்வுடன் கூடிய வெளிப்படையான அமைப்பு.
- வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பான வினவல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விஷயங்களில் துல்லியமான தகவல்களைப் பெறுதல்.
- ஒரு சேவையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச நேரம்.
ஊழியர்களுக்கான நன்மைகள்
- துறை சார்ந்த செயல்முறைகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதற்கான அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மை உடன் நிர்வாகத்தை எளிதாக்குதல்.
- உடனுக்குடன் சேவை வழங்குவதை உறுதிப்படுத்துதல்.
- பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு நபர்களின் மூலம் பயிற்சி அளித்தல்.
வணிகக் குழுக்கள் / தனியார் கூட்டு வணிகர்களுக்கான நன்மைகள்
- குறைந்தபட்ச. நடைமுறை வசதிகளை பயன்படுத்தும் ஆன்லைன் வழிமுறைகள்.
- நகராட்சியின் செயல்திறன் குறித்த சரியான, புதுப்பிக்கப்பட்ட நம்பகமான தகவல்களை வழங்குதல்
- தரமான சேவை வழங்க எளிமையான மற்றும் வசதியான நடைமுறைகள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வசதியான வழிகள்
- விரைவாக வழக்குகளை தீர்ப்பது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான நன்மைகள்
- உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த சரியான தகவல்கள், நிர்வாகத்தில் சிறப்பாக பங்கேற்க உதவுகிறது.
- மேலாண்மை தகவல் அமைப்பு சிறந்த முடிவுக்கான கருவியாக உதவுகிறது.
- நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை.
அரசுக்குகான நன்மைகள்
- அலுவலக நடைமுறைகள் மற்றும் துறை செயல்பாடுகளின் திறமையான நிர்வாகம்.
- விதிகள் மற்றும் செயல்கள் மூலம் திறமையான நிர்வாக அமலாக்கம்.
- குடிமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சேவைகளை வழங்குதல்.
- குடிமக்களுக்கும் வணிகக் குழுக்களுக்கும் ஆன்லைனில் கூடுதல் சேவைகளை வழங்குதல்.
- ஆவண காப்பகம், சேமிப்பு மற்றும் மீட்டெடுப்பதற்கான எளிதான மற்றும் வசதியான வழிமுறை
- மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் முடிவெடுப்பது.
- பங்குதாரர் நலன்களுக்கான செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளில் எளிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் வழங்குதல்.