சென்னைப் பெருநகர் மற்றும் புறநகர் மேம்பாட்டுக்கென சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என இருபெரும் சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்கியுள்ளார்கள். நகரங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள், கழிவு நீர், மழைநீர் வடிகால்கள், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை பேருந்து நிலைய அபிவிருத்தி, பூங்காக்கள் முதலானவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்த இந்த இரண்டு திட்டங்களும் வழிவகுக்கின்றன.